திரைக்கதையின் வலிமையில் ‘எய்தவன்’

ei 7

ஃபிரண்ட்ஸ் ஃபெஸ்டிவல் ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் . சுதாகரன் தயாரிக்க,  கலையரசன், சாதனா டைட்டஸ், ஆடுகளம் நரேன், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க ,

மதயானைக் கூட்டம் என்ற சிறந்த படத்தைக் கொடுத்த விக்ரம் சுகுமாரனிடம் அதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய சக்தி ராஜ சேகரன் இயக்கி இருக்கும் படம் எய்தவன் .

வரும் மே ஐந்தாம் தேதி படம் வெளியாக இருக்கும்  நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து படக் குழு.

படத்தின் இரண்டு முன்னோட்டங்கள் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டன . நல்லவர்களின் அமைதி காரணமாக கெட்டவர்கள் அராஜகம் செய்வதை

ei 9

வணிக ரீதியிலான பாடல்கள் மற்றும் சண்டைக் காட்சிகளோடு சுட்டிக் காட்டின முன்னோட்டங்கள் .  ஒரு கானா பாடல் உட்பட திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் நன்றாக இருந்தன .

குறிப்பாக  பிரேம்குமாரின் ஒளிப்பதிவு, அதிலும் ஒளி– இருள் ஆளுமை நன்றாக இருந்தது . சக்தி ராஜ சேகரனின் படமாக்கல் நன்றாக இருந்தது .

படத்தை வாங்கி வெளியிடும் சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேல் நிகழ்ச்சியில் பேசியபோது ” நான் வாங்கிய முதல் படம் இது. என்னை படத்தை வாங்க வைத்ததற்கு காரணம் இதன் மிக சிறப்பான திரைக்கதை .

ei 6

அப்புறம் நல்ல கதை என்றால் சம்பளத்தில் பெரிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் கலையரசன் இந்தப் படத்தில் கொடுத்து இருக்கும் உழைப்பு  இவையே காரணம் . படம் எல்லோருக்கும் பிடிக்கும் ” என்றார் .

தயாரிப்பாளர் சுதாகரன் தன் பேச்சில் ” சக்தி ராஜ சேகரன் எனது பல வருட நண்பர் . தயாரிக்க முடிவு செய்த நிலையில் பல கதைகள் கேட்டேன் . அதில் சக்தி ராஜ சேகரன் சொன்ன கதை சிறப்பாக இருந்தது .

ei 5

படம் எடுத்தோம் . சக்திவேலன் படத்தை வாங்கியது மகிழ்ச்சி . அதில் அபினேஷ் இளங்கோவனும் இணைந்தது இன்னும் மகிழ்ச்சி ” என்றார் .

ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் பேசும்போது ” சக்தி ராஜ சேகரன் என்து பல ஆண்டு நண்பர் . படத்தின் கதையை சொன்னபோது , நன்றாக இருந்தது . இந்தப் படத்தை மிஸ் பண்ண வேண்டாம் என்று நினைத்தேன் .

தயாரிப்பாளரைப் பார்த்த போது இவர் படத்தை எடுத்து முடிப்பாரா என்று தோன்றியது . ஆனால் அவர் ரொம்ப தெளிவாக இருந்தார் . இப்போது இன்னும் தெளிவாக ஆகி இருப்பார் . 

ei 99

கலையரசன் மிக சிறப்பாக நடித்துள்ளார் . குறிப்பாக அந்த கண்கள் ரொம்ப சிறப்பு . எல்லோரும் சிறப்பாக பங்களித்து இருக்கும் படம் இது ” என்றார் .

வேல ராமமூர்த்தி  தன் பேச்சில் ” இன்றைய சூழ் நிலையில் நாட்டுக்கு அவசியமான விஷயத்தை  கல்வித் துறையில் உள்ள சீர் கேடுகளை சொல்லும் படம் இது .

என் மகளை மெடிக்கல் கல்லூரியில் சேர்க்க நான் அல்லாடிக் கொண்டு இருந்தபோது சக்தி வந்து இந்தக் கதையை சொன்னார் . அப்படியே மனதில் ஒட்டிக் கொண்டது . .

எனது மருமகன் ஒளிப்பதிவாளர் பிரேம் குமார் பற்றி சொல்ல வேண்டும் . ரொம்ப பெரிய திறமைசாலி . என் மேல் அன்பு கொண்டவர் .

ei 4

எனக்கு முதல் ஷாட் வைத்து எடுத்து முடித்த உடன்’ மாமா .. நான் உங்களை படம் எடுத்துட்டேன் மாமா ‘ என்று அவர் சந்தோஷப் பட்டதை மறக்க முடியாது .

நானெல்லாம் பலாப் பழம் போல . போராடினால்தான் என்னிடம் இருந்து பலன் பெற முடியும் . ஆனால் கலையரசன் நடிப்பில் திராட்சைப் பழம் போல .

அப்படியே எடுத்து சாப்பிடலாம் . மத யானைக் கூட்டம் முதலே அவர் திறமையை நான் அறிவேன் .  எல்லோரும் பார்த்து உணர வேண்டிய படம் இது ” என்றார் .

அபினேஷ் இளங்கோவன் பேசும்போது ” எய்தவன் நம்பிக்கையான படம் . நல்ல படம் . இங்கே ஒரு விசயத்தை சொல்ல விரும்புகிறேன் . துருவங்கள் பதினாறு படம் ஏழு கோடி வியாபாரம் செய்தது .

ei 3

ஆனால் அதில் தியேட்டர் மூலம் வந்தது இரண்டே முக்கால் கோடிதான். காரணம் பலரும் அதை பைரசி மூலமாகவும் ஆன் லைனில் திருட்டுத்தனமாகவும் பார்த்து விட்டார்கள் .

அந்தப் படம் மட்டும் தெலுங்கில் எடுக்கப்பட்டு இருந்தால் இருபது கோடி ரூபாய் வியாபாரம் ஆகி இருக்கும் . காரணம் அங்கே மக்களிடமே திரைப்படத்தை பணம் தராமல் பார்ப்பது தவறு என்ற எண்ணம் இருக்கிறது .

ஆனால் இங்கே மக்களுக்கு திருட்டு வி சி டி பார்ப்பது தவறு . அதனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என்ற விசயமே தெரியவில்லை. மக்களுக்கு அதை மீடியாக்கள்தான் தெரிவிக்க வேண்டும் ” என்றார் .

இயக்குனர் சக்தி ராஜ சேகரன் தன் பேச்சில் ” படம் எடுக்கும்போது நல்ல கருத்துள்ள விஷத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணுபவன் நான் .

ei 999

அதே நேரத்தில் அதை சுவாரஸ்யமாகவும் சொல்ல வேண்டும் . அப்படி சொல்லாத காரணத்தால் பல நல்ல படங்கள் ஓடாமல் போயிருக்கின்றன .

இப்போது நீங்கள் பார்த்த இந்த கானா பாட்டு எல்லாம்,  இந்த எய்தவன் படத்தின் கதைக்கு அவசியமில்லைதான். ஆனால் இன்டரஸ்டிங் ஆக சொல்ல வேண்டும் என்கிற போது தேவைப்படுகிறது .

கல்வியின் பிரச்னைகளை சொல்லும் படம் இது . பனி ரெண்டாம் வகுப்பு வரை பிள்ளைகளை படி படி என்று முடக்கிப் போடுகிறோம் .

படித்த பிறகு சீட் வாங்கப் போராட்டம் , வாங்கிய பிறகு வேறு விதமான போராட்டம் என்று படிக்க வைப்பதற்குப் பின்னால் உள்ள போராட்டங்களுக்கு முடிவே இல்லை . அதை எல்லாம் தொகுத்து உருவாக்கிய படம் இது .

ei 2

எனவேதான் திரைக்கதை எல்லோருக்கும் பிடித்து உள்ளது .

மதயானைக் கூட்டம் முதலே வேல ராமமூர்த்தி சார் பழக்கம் . இதுவரை அவரை நெகட்டிவ் கேரக்டரில் பார்த்து இருப்பீர்கள் . இந்தப் படத்தில் பாசமுள்ள அப்பாவாக கலக்கி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்  பிரேம் குமார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் . இப்போது அவர் இயக்குனர் ஆகி விட்டார் . விஜய் சேதுபதி நடிக்கும் 96 என்ற படத்தை இயக்க இருக்கிறார்

கலையரசன் இந்தப் படத்துக்குப் பெரும் பலம் சேர்த்து உள்ளார் . இந்தப் படத்துக்குப் பிறகு அவர் பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வருவார் ” என்றார்

நிறைவாகப் பேசிய கலையரசன்,” மதயானைக் கூட்டத்தில் சேர்ந்து பணியாற்றிய காலத்தில் இருந்தே சக்தி ராஜசேகரன் எனக்குப் பழக்கம் .

ei 8

என்ன பிரச்னை வந்தாலும் அது பற்றிக் கவலைப்படாமல் தன்வேலையை சரியாகப் பார்க்கும் அவரது சின்சியாரிட்டி எனக்கு ரொம்பப் பிடிக்கும் .

அவர் வந்து கதை சொன்னபோது அது எப்படி இருந்தாலும் நடிக்கத தயாராக இருந்தேன் . ஆனால் நன்றாகவே சொன்னார் .

புதுசா வித்தியாசமா என்பதை விட சொன்ன விதத்தில் திரைக்கதையில் அசத்தலாக இருந்தது . நடித்தேன். தயாரிப்பாளர் சிறப்பாக ஒத்துழைப்புக் கொடுத்தார் .

வேல ராம மூர்த்தி அய்யாவின் பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்று தெரியல . இனிமேல் அதற்கான தகுதியை மேலும் வளர்த்துக்குவேன்.

பிரேம்குமாரின் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது .  சக்திவேலனும் அபியும் படத்தை வாங்கிய பிறகு இது பலமான படம் ஆகி விட்டது . ” என்று முடித்துக் கொண்டார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *