பாபுராஜாவின் ‘திருப்பதி சாமி குடும்பம் ‘

thiru 2

ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா, ஜெம்ஸ் பிலிம்ஸ் முருகானந்தம்  இணைந்து தயாரிக்க,  பாபுராஜாவின் புதல்வர்கள் ஜே.கே, ஜாகீன் ஆகியோர் கதாநாயகர்களாக  அறிமுகமாக,

தயாரிப்பாளர்களில் ஒருவரான முருகானந்தம்  ஜெயன் என்ற பெயரில் முக்கிய வேடத்தில் அறிமுகமாக, தேவதர்ஷினி, லஷ்மி ஐஸ்வர்யா, மயில், முத்துராமன், கே.அமீர், சிசர்மனோகர் ஆகியோர் உடன் நடிக்க,

அரசு, கம்பீரம் உட்பட பல படங்களை இயக்கிய சுரேஷ் சண்முகம் எழுதி இயக்கி இருக்கும் படம் திருப்பதிசாமி குடும்பம். இசை சாம் டி ராஜ்

thiru 5

படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் லிங்குசாமி , வசந்த பாலன், ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள் .

நிகழ்வில் படத்தின் முன்னோட்டமும் இரண்டு பாடல்களும் திரையிடப்பட்டன.

ஒரு குடும்பம் , உறவுகள் அதில் வரும் நிகழ்வுகள் என்று படம் போகும் என்பது படத்தின் முன்னோட்டத்தில் தெரிந்தது . பாடல்கள் இசை நன்றாக இருந்தது .

நிகழ்ச்சியில் பேசிய லிங்குசாமி

thiru 1

” எனது முதல் படமான ஆர் பி சவுத்ரி சார் தயாரித்த ஆனந்தம் படத்துக்கு ஆரம்பத்தில் இந்தப் பெயர்தான் வைத்து இருந்தேன் .

அப்புறம் ஆனந்தம் விளையாடும் வீடு என்று பெயர் வைத்து அதை ஆனந்தம் என்று வைத்தோம் . அப்போது நான் சவுத்ரி சாரை சந்திக்க முக்கியக் காரணமாக இருந்தவர் பாபு ராஜா .

இன்று அவர் தயாரிக்கும் படத்துக்கு அந்தப் பெயர் அமைந்து இருப்பது சந்தோஷமே ” என்றார்

thiru 4

”பாபு ராஜாவின் பிள்ளைகள் இருவரும் நன்றாக நடித்துள்ளனர் . அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என்று வாழ்த்தினார் வசந்த பாலன்.

இயக்குனர் சுரேஷ் சண்முகன் ”  கால் டாக்சி டிரைவர் திருப்பதிசாமி, மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் என சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த குடும்பத்திற்கு  ஒரு சின்ன தடங்கல்.

திருப்பதிசாமியின் பிள்ளைகளுக்கு நடக்கும் எதிர்பாராத நிகழ்வு ஒன்று அந்த சந்தோஷக் குடும்பத்தை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.

thiru 3

ஜாலியான அதே சமயம் கனமான ஒரு உணர்வையும் இந்த திருப்பதிசாமி குடும்பத்து திரைக்கதை உருவாக்கும். நல்ல படம் நல்ல உணர்வை ஏற்படுத்தும்

படம் நிச்சயம் மக்கள் மனதில் நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி தரும் என்று நம்புகிறோம். திருப்பதிசாமி குடும்பம் அந்த வகைப் படமாக பாராட்டு பெறும் “என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *