மலேசியத் தமிழர்களான அரங்கண்ணல் ராஜு என்பவர் தயாரித்து இயக்க, ஜெகன் என்பவர் நாயகனாக நடிக்க ,
மலேசிய எஸ்டேட்டுகளில் வேலைபார்க்கும் தோட்டத் தொழிலாளிகளான தமிழர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை வைத்து எடுக்கப்பட்ட படம் தோட்டம்.
படத்தின் திரையிடலில் இயக்குனர்கள் சீனு ராமசாமி, சக்தி சிதம்பரம் , நடிகர்கள் ஆரி , அபி , கவிஞர் யுகபாரதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்
”மலேசியா என்றாலே, வானுயர்ந்த கட்டிடங்கள் தான் நினைவுக்கு வரும்… ஆனால், அங்கிருக்கும் தோட்டங்களில் நடக்கும் கதை இது.
தந்தையின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தனயன்… அதற்குள் ஒரு அழகான காதல்… குலதெய்வம் முனீஸ்வரன், கண்ணியமாகக் காட்சிப் படுத்தப் பட்டிருக்கும் பெண்கள் என்று,
அனுபவமில்லாத நடிகர்களை வைத்து அற்புதமான படமாகத் தோட்டத்தைக் கொடுத்திருக்கிறார் அரங்கண்ணல் ராஜு. ..” என்று பாராட்டினார் சீனு ராமசாமி.
”பிரிட்டிஷ் ஆட்சியில் ,19 ஆம் நூற்றாண்டு ஆரம்பத்தில் தமிழகத்திலிருந்து இலங்கை , மலேசியா போன்ற நாடுகளுக்குத் தோட்டவேலைக்காகத் தமிழர்கள் கப்பலில் அழைத்துச் சென்றார்கள்…
இவரின் தந்தையாரும் அந்த வழியில் வந்த தோட்டத் தொழிலாளர்களில் ஒருவர்தான். அந்த எளிய மக்களுக்கு மரியாதை செய்யும் வகையிலும்
இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறேன்..” என்றார் இயக்குநர் அரங்கண்ணல் ராஜு.
”உலகெங்கிலும் வாழும் தமிழர்களைக் காப்பாற்ற பிரபாகரனால்தான் முடியும் என்கிற கருத்தைச் சொன்னதற்காகவே தோட்டம் எனக்கு மிகவும் பிடிக்கிறது “என்றார் யுகபாரதி.
நடிகர் ஆரி தன் பேச்சில் ”உலகமயமாக்களால் வணிகத்துக்கும் வாழ்க்கைக்கும் நடக்கும் போரைச் சொல்லியிருக்கும் இந்தப் படத்தில்,
கிளைமாக்சில் தோட்டத்தை அழிக்க முயலும் அந்த பெரும் பணக்காரர் திருந்துவது போல ,
மல்டி நேஷனல்.கம்பெனிகள் நெடுவாசலை,தமிழகத்தை விட்டுப் போய்விட்டால் மகிழ்ச்சியாக இருக்கும்…
இப்போ சிஸ்டம் சரியில்லை என்று சிலர் சொல்கிறார்கள் .ஆனால் அதுக்கு நாம் என்ன செய்தோம் என்பதுதான் கேள்வி.
மாற்றம் மற்றவர்களால் நிகழ்த்தப்படுவது அல்ல… நம்மிலிருந்து உருவாக்கப்படுவது…
நாம் உண்ணும் உணவே விஷமாகிக் கொண்டுள்ளது. பிறந்த நாளுக்கு நம் குழந்தைகளுக்கு நாமே.விஷத்தை ஊட்டும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது….
கேன்சரை வரவழைக்கும்.வேதிப்பொருள் கேக்கில் சேர்க்கப்படுகிறது.. அரசாங்கம் அனுமதி மறுத்த பல பொருட்கள்.உணவின் நிறமிகளாகப் பயன்படுத்தப்படுகிறது..
உணவு கவர்ச்சியாகப் பரிமாறப்படுகிறது.. இந்தியாவில் ஆண்டுதோறும் 7 லட்சம் கேன்சர் நோயாளிகள் உருவாகிறார்கள்…
கேன்சர் மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்காக , நம்மைக் கேன்சர் நோயாளியளாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்…
வெள்ளைச் சார்க்கரையை முற்றிலும் தவிர்க்கவேண்டும். அயோடின் உப்பு, பட்டைதீட்டப்பட்ட அரிசி, பாக்கெட் பால், மைதா
மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் ஆகியவற்றைத் தவிர்த்தால்தான் ஆரோக்கியமாக வாழமுடியும்.
சுத்தமான பால் வேண்டுமா, நான்கைந்து பேர் சேர்ந்து பசு மாடுகளை வளர்த்து, நான்கைந்து பேருக்கு வேலைவாய்ப்பும் கொடுங்கள். பாலுக்குப் பாலும் ஆச்சு, வேலைவாய்ப்பும் ஆச்சு!
காய்கறிகளை வீட்டுத் தோட்டத்தில் பயிரிடு டங்கள். இறக்குமதி செய்யப்பட்ட விதைகளைத் தவிருங்கள். நம் நாட்டுப் பப்பாளி விதைக்கு,
எவனோ காப்புரிமை வாங்கப் போறான் நமது மண்ணின் விதைகளை நாம் வைத்துக்கொண்டால் குற்றம் என்று சட்டம் வரப்போகிறது.
மரபணு மாற்றப்பட்ட விதை, அவன் கொடுக்கும் உரம் என்று மண்ணின் வளத்தையும் மனிதனின் ஆயுளையும் அழிக்காமல் ,
பாரம்பரிய உணவுக்கு மாறுவோம். திணை, கம்பு, வரகு இவையெல்லாம் இயற்கையாகக் கிடைப்பவை.
அதில் அரசியல்வாதியின் மகனும் நீதியரசர்களின் மகன்களும் கலந்து கொள்கிற ஒரு நிகழ்சசியிலேயே உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் மைதாவால் ஆன உணவுப்பொருட்கள்,
கேன்சர் வரவழைக்கும் பிளாஸ்டிக்குகளில் பரிமாறப்படுகிறது. ஆனால், சிஸ்டத்தை உருவாக்குபவர்களின் வாரிசுகளே விழிப்புணர்ச்சி இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
பிளாஸ்டிக் இல்லாமல் வாழமுடியாதுதான் ஆனால், நோய்த்தொற்றக் காரணமான மூலக்கூறுகளை உணவுக்கு அனுமதிக்காத பிளாஸ்டிக்குகள் இங்கு இல்லை…
விழிப்போடு இருப்போம்.. சிஸ்டத்தை நாம் மாற்றுவோம்… அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியத்தை விட்டுச் செல்வோம்…” என்று அசத்தலாகப் பேசினார் ஆரி.