படக்குழுவை திகில் அடைய வைத்த அரண்மனை 3

அரண்மனை 1, 2  படங்களை விட அரண்மனை 3 படம் வித்தியாசமாகவும் மிக சிறப்பான கதையம்சத்துடனும் பிரம்மாண்டமாகவும் இருப்பதாக படம் பார்த்தவர்கள் சொல்கின்றனர். 
 
அரண்மனை 3 படத்தில் 12 அடி உயர லிங்கம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது பொதுமக்கள்  அது  உண்மையான லிங்கம் என்று நினைத்து கூட்டமாக வந்து தரிசனம் செய்து பூக்கள் தூவி பூஜித்துள்ளனர். இதனால் தினமும் சிறிது நேரம் படப்பைடிப்பு நிறுத்தி வைத்து பொதுமக்கள் பூஜை செய்து கலைந்து சென்ற பிறகு படப்பிடிப்பை தொடர்ந்துள்ளனர்.
 
அரண்மனை 3 படப்பிடிப்பின் போது படக்குழுவினருக்கு எதிர்பாராத அமானுஷ்ய அனுபவங்கள்  ஏற்பட்டுள்ளது.  குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் என்னும் ஊரில் மகாரானா ராஜ் ஸ்ரீ அமர் சிங் என்னும் ராஜ்புத் அரசரால் 1907ம் ஆண்டு கட்டப்பட்ட அரண்மனை வேண்கனியர் பேலஸ். இந்த வேண்கனியர் அரண்மனையில்தான் அரண்மனை 3 படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கபப்ட்டுள்ளது. பழமையன அரண்மனை என்பதால் படப்பிடிப்பின்போது இரவு நேரங்களில் திடீரென்று குதிரை கனைத்துக்கொண்டு அரண்மனையை சுற்றி சுற்றி வரும் சத்தம் இரவு முழுதும் கேட்குமாம். அது மட்டுமின்றி, பதிவு செய்த காட்சிகளில் படக்குழுவினர் வைக்காத அரசரின் பொருட்கள் அமானுஷ்யமாக பதிவாகியிருக்குமாம். இதை பார்த்து படக்குழுவினர்  திகிலடைந்துள்ளனர்.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *