என்று சொல்லிக் கொண்டே இருப்பதும் என்னவகையான கேரக்டரைசேஷன் ?
ஒரு பெண்ணின் டைமிங் சென்ஸ் திறமையைப் பார்த்து வேலைக்கு வர சொன்ன கணியன் ,
ஏதோ ஒரு நிலையில் தனது துப்பறியும் வேலையில் அவளது திறமைக்கு ஏற்ற வேலை கொடுப்பான் என்று பார்த்தால்…
வேலை கேட்டு வந்த பெண்ணின் கையில் விளக்குமாற்றைக் கொடுத்து நடுஹாலில் தள்ளி விட்டுக் கதவை பூட்டிக் கொண்டு வெளியே போகிறான் .
அந்த பிற்போக்குப் பீத்தரையும் அப்படியே படுத்துக் கொண்டு விளக்குமாற்றுக்குப் பேன் பார்த்தபடி வெட்கப்படுது .
எப்போப் பார்த்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தோடு என்னடி வாடி போடி என்று டி போட்டுப் பேசும்போது எல்லாம்,
( இன்டிமசியை காட்டும் டி அல்ல அது !) சிலுத்துப் பொய் நிக்குது . அடப் போங்கப்பா …. ! லவ்வாம் .. கருமம் கருமம் .
பார்க்கிற எல்லோரையும் வில்லணும் அவன் ஆட்களும் அடிவயிற்றில் இடம்வலமாக அறுத்துக் கொல்வதும்….
பிரிட்ஜில் இருந்த பிணத்தை எடுத்து பாத்ரூமில் வைத்து எலக்ட்ரிக் ரம்பத்தால் வினய் கதாபாத்திரம் அறுக்கும்போது , ஆன்டிரியா கதாபாத்திரம் போய் காபி கொடுப்பதும் ,
முகம் முழுக்க ரத்தம் வழியும் நிலையில் வினய் அந்த காபியை குடிப்பதும் … ஒன்னும் சொல்றதுக்கு இல்ல .
பாக்யராஜ் , பிரசன்னா , எல்லோரையும் இப்படி வீணடித்து இருக்கத் தேவை இல்லை .
எனினும் பிச்சாவரம் அலையாத்திக் காடுகளில் எடுக்கப்பட அந்த கிளைமாக்ஸ் , அந்த நேர்த்தியாக படமாக்கல் , பஃர்பக்டான ஆக்ஷன் சீக்வன்ஸ் ,
வில்லனுக்கு பதில் சொல்லிக் கொண்டே மனோவுக்கு கணியன் பொருத்தமான வார்த்தைகளில் குளூ கொடுக்கும் லாவகம் , அங்கே விஷாலின் வசன பாவனை
ஆரம்பக் காட்சியில் ஆசைப்பட்டபடி ஏன் அங்கிள் என் நாயைக் கொன்னீங்க என்று வில்லனிடம் சிறுவன் கேட்கும் கவிதைத்தனம், அதற்கு வில்லன் சொல்லும் பரிதாப பதில்
இவை எல்லாம் ரசனைக்குரியவை .
துப்பறிவாளன் ….. தப்பறிவாளன் , அதாவது கிளைமாக்ஸ் காட்சியால் தப்பும் அறிவாளன் !
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462