தமிழகமும் தாமரையும் TN ELECTION – TAG LINE INTRODUCING FUNCTION

நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது..
 
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ்நாடு அறிவுசார் பிரிவின் சார்பாக  கட்சியின் புதிய நிர்வாகிகளுடன்  தேர்தலில் பின்பற்ற வேண்டிய யுக்திகள் குறித்து “தமிழகமும் தாமரையும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
 
 கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவர் திரு.செல்வி தாமு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ராமலிங்கம்,மற்றும்  திரு.கு. க. செல்வம், திரு.ஆர். கே. சுரேஷ், திருமதி. கலா மகேஷ், திருமதி.கண்மணி, திரு. பிரமிட் நடராஜன், திருமதி. டெய்சி சரண் என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
 
இந்த நிகழ்வில் தற்போது நடைபெற இருக்கின்ற 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய எடுக்க வேண்டிய யுக்திகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு விளக்கப்பட்டது.
 
பாரதிய ஜனதா கட்சியின் Tag Line ஆக – “தாமரை மலரட்டும் – தமிழகம் வளரட்டும்.” என்ற Tag Line வெளியிடப்பட்டது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *