இன்று சில நடிகர்கள் இருக்கும் இடம் பிரசாந்திடம் இருந்திருக்க வேண்டியது.
இளம் வயதிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்த நடிகர் என்ற பெருமை மட்டுமின்றி காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஜானர்களிலும் நடித்துப் பார்த்தவர் பிரஷாந்த்.
ஆனாலும் அவரது ஆள் உயரம் அமைந்த அளவுக்கு சினிமா உயரம் இன்னும் அமையவில்லை.
எனினும் தன்னை தக்க வைத்துக் கொண்டு போராடிக் கொண்டு இருப்பது பாராட்டுக்குரிய விஷயம் .
அவரது நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் தயாராகி இருக்கும் நிலையில் தற்போது விஜயின் ‘கோட்’ படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், பல புதிய படங்களில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பிரஷாந்த், தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துக்கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த், “நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். எனது ஒவ்வொரு பிறந்தநாளன்று நான் காலம்காலமாக செய்வது, முதலில் என் பெற்றோரிடம் ஆசி பெறுவேன், பிறகு கோவிலுக்கு செல்வேன். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அதுபோல் தான் இந்த வருட பிறந்தநாளும் அமைந்திருக்கிறது.
என் பிறந்தநாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள். ஆனால், இந்த வருடம் அவர்கள் பலருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இந்த நற்பணியை செய்தவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறார்கள்.
அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு. பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது.
அதேபோல் நிறைய தண்ணீர் குடிங்க, பாராளுமன்ற தேர்தல் வருகிறது, அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்க, ஓட்டு மிகவும் முக்கியமானது.” என்றார்.
கதைத் தேர்வில் கூட நான் தலையிட மாட்டேன், அதனால்தான் பிரஷாந்த் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். அவராகவே கதை கேட்பார், அந்த கதை பிடித்திருந்தால் என்னிடம் சொல்வார். நான் புதிய இயக்குநராக இருக்கிறாரே என்று சொன்னால், கதை கேளுங்கள் நன்றாக இருக்கிறது, என்பார். அப்படித்தான் இயக்குநர் ஹரி உள்ளிட்ட பல புதிய இயக்குநர்களை பிரஷாந்த் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், அவர் தற்போது பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார். அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஒரு சிறப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு வைக்க இருக்கிறோம், அதில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்போம்.” என்றார்.
