இனிமே இப்படிதான்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சந்தானம் “என்னை நன்கு புரிந்து கொண்டவர்கள் என்பதால் இனி சிம்பு, ஆர்யா, உதயநிதி, கவுதம் மேனன் படங்களில் மட்டும் காமெடியனாகவும் நடிப்பேன் . மற்ற யார் படத்திலும் காமெடியனாக நடிக்க மாட்டேன் . ஒன்லி ஹீரோதான் . ஏன்னா இனிமே இப்படிதான் ” என்று கூறி இருந்தார் . ( உதயநிதி அறிமுகமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் முதல் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘நண்பேன்டா’ படம் வரை படத்தின் வெற்றிக்கு சந்தானமும் ஒரு காரணம் என்பது தெரிந்த விசயம்தான்) )
அதோடு “படங்களை தயாரிப்பதைவிட, அதை வெளியிடுவதில்தான் அதிகம் சிரமம் உள்ளது” என்றும் அப்போது சந்தானம் பேசினார்.
அடுத்து சில நாட்கள் கழித்து நடந்த, படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “நீங்கள் உதய நிதிக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் . ஆனால் பல படங்களை வாங்கி தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் மூலம் வெளியிடும் உதயநிதி ஸ்டாலின் உங்கள் படத்தை இன்னும் வாங்காமல் இருக்கிறாரே ?” என்று சந்தானத்திடம் கேட்கப்பட்ட போது…
“அது எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் . அவரே என் படத்தை வெளியிடும் நிலை இல்லை என்று இப்போதே சொல்ல முடியாது . எப்போது வேண்டுமானலும் நடக்கலாம்” என்று கூறி இருந்தார்
அதே நேரம், சந்தானம் சொந்தப்படமாக தனது ஹேண்ட் மேட் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள, .இந்தப் படத்தை சந்தானமே வெளியிட தயாரானார்.
இந்நிலையில்
சந்தானத்தின் வாக்கு பலித்தது . !
சந்தானத்துக்கு கைகொடுக்கும்விதமாக அவர் நடித்த ‘இனிமே இப்படித்தான்’ படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வாங்கி வெளியிடுகிறார் .
நண்பேன்டா !!!

