இன்னொரு மணிரத்னத்தின் ‘யாகாவராயினும் நாகாக்க’

IMG_8577
தெலுங்கில் மிகக் குறைந்த காலத்தில் 63 படங்களை இயக்கியவர் ரவிராஜா பினிசெட்டி. இதில் ரஜினி நடித்த படங்களும் அடங்கும். நாசரை முதன் முதலில் தெலுங்கில் அறிமுகப்படுத்தியவரும் இவர்தான்.இவரது இரண்டாவது மகன்தான் நடிகர் ஆதி.மூத்த மகன்?இந்தியாவில் பிகாம் முடித்துவிட்டு லண்டனில் எம்.பி.ஏ. முடித்து விட்டு,  தமிழில் ஜெயம்ராஜா தெலுங்கில் ஷிவ்குமார்  என சில இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி விட்டு,  மேலும் சினிமாவைப் பற்றி ஆழமாக அறிந்து கொள்ள அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்லில் அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 2 ஆண்டுகள் சினிமா படித்து….அங்கு சிறந்த 28 மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு பதக்கமும் பரிசும் பெற்று… ஆஸ்கார் விருது விழாவில் மல்ட்டி கல்சரல் மோஷன் பிக்சர்ஸ் அசோசியேஷன் சார்பில்   கௌரவிக்கப்பட்ட பெருமை பெற்ற அந்த மூத்த மகனின் பெயர் சத்ய பிரபாஸ். அமெரிக்காவில் தான் எடுத்த குறும்படத்துக்காக கோல்டு மெடல் விருது பெற்றவர்  இந்த சத்யா பிரபாஸ்.

இப்போது….?

IMG_8510

ஆதர்ஷ் சித்ராலயா சார்பில்  ரவிராஜா பினிசெட்டி தயாரிக்க, ஆதி நாயகனாக நடிக்க சத்ய பிரபாஸ் அறிமுக களம் இறங்கி  உருவாக்கி இருக்கும் படம் யாகாவாராயினும் நாகாக்க.  திருக்குறளின் முதல் அடியின் மூன்று சீர்களை பெயராகக் கொண்டு வரும் இந்தப் படத்தில் நிக்கி கல்ரானி கதாநாயகியாக நடிக்க, நாசர், பசுபதி, கிட்டி, நரேன்  என்று பல தேர்ந்த நடிகர்கள் . ஒரு முக்கிய வேடத்தில் நடிகை ரிச்சா பல்லோட் நடிக்கிறார்.

இவர்களுடன் கார்த்திக், ஷ்யாம், சித்தார்த் என மூன்று புது முகங்கள் ஆதியின் மூன்று நண்பர்களாக  அறிமுகமாகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு காலத்தில் இந்தி சினிமாவையே கலக்கிய பிரபல  பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி முதன் முதலாக தென்னிந்திய மொழிப் படத்தில் அறிமுகமாகிறார்.  ”இதற்கு மேல் நான் தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகி என்ன செய்யப் போகிறேன் ?” என்று கேட்டு ஆரம்பத்தில் நடிக்க  மறுத்த மிதுன் சக்கரவர்த்தியிடம், 

இருபது நிமிடம் மட்டும் சந்திக்க அவகாசம் கேட்டு அதற்குள் கதையை சொல்லி அசத்தி அவரைச் சம்மதிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
IMG_8518
கேரளாவில் ஐ படத்தை மிகச் சிறந்த முறையில் விநியோகம் செய்து  லாபம் ஈட்டிய தேர்ந்த அனுபவசாலியான பிரேம் மேனன் இந்தப் படத்தினால் மிகவும் கவரப்பட்டு  படத்தை வாங்கி தமிழகம் எங்கும் வரும் 26 ஆம் தேதி வெளியிடுகிறார்.
“நாயகன் மற்றும் அவரது மூன்று நண்பர்களுக்கு இடையேயான நட்பில் ஒரு நாள் இரவு ஒரு நண்பன் சொன்ன ஒரு வார்த்தையால்,  எப்படி அவர்கள் வாழ்க்கை புரட்டிப் போடப்பட்டு மாறுகிறது என்பதை சொல்லும் படம் இது. எனது  வாழ்க்கையில் எங்கள் நண்பர்களுக்கு இடையில் நடந்த   ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் படம் தயாராகிறது.
இது ஒரு த்ரில்லர் படம் என்றாலும் ரொமாண்டிக் காமடி, லவ், ஃப்ரண்ட்ஷிப் எல்லாமே இருக்கும்.படத்தைப் பற்றி நானே பெரிதாகப் பேசக்கூடாது. ஆனால் படம் பார்த்தவர்கள் இதை பத்தோடு பதினொன்றாக ஒதுக்கி விட முடியாத படமாக இருக்கும் “என்று உத்திரவாதம் தருகிறார் இயக்குனர் சத்ய பிரபாஸ்

சென்னை, பாண்டிச்சேரி, கோவா, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் 111 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல இடங்களில் பின்புலம் சரியாக அமைய பலமாதங்கள் காத்திருந்து  எடுத்துள்ளனர். உதாரணமாக சென்னை காசிமேடு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் இருக்கும்போதுதான்  கரையில் நிறைய படகுகள்இருக்கும். எனவே அதற்காக 300 நாள் காத்திருந்து எடுத்துள்ளனர்.
அதே போல மும்பை அந்தேரியில் பல சுரங்கப் பாதைகளில் ஆயிரக்கணக்கான  துணை நடிகர்களுடன்   இரவில் படப்பிடிப்பு நடத்தி ஏரியாவையே சுறுசுறுப்பாக்கி இருக்கிறார்கள்
IMG_8504
ஒளிப்பதிவாளர்  சண்முக சுந்தரம்..இவர் இதற்கு முன்பு ரௌத்ரம், ஆரோகணம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.வல்லினம் படத்துக்காக தேசிய விருது பெற்ற சாபு ஜோசப் படத் தொகுப்பு செய்கிறார் . ஷாம், ப்ரவீன், பிரசன் என்று மூன்று இசையமைப்பாளர்கள். இவர்கள் எல்லாருமே பல லட்சங்கள் சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார்களாம். அதுவும் ஷாம் ஆண்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வருமானம் பார்த்தவராம்.
படத்தின் பாடல் மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே ஆர் கலந்து கொண்டு பாடல்களை வெளியிட்டு வாழ்த்தினார்.
எல்லோரையும் வரவேற்றுப் பேசிய ரவிராஜா பினிசெட்டி “நான் பிறந்தது , படித்தது , வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இந்த தமிழ் மண்ணில்தான் . அந்த தமிழ் மண்ணுக்கு நன்றி . படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது . படத்தை வெளியிடும் குளோபல் யுனைடெட்  மீடியா பிரேம் மேனனுக்கு நன்றி ” என்றார்பசுபதி பேசும்போது ” ரவிராஜா பினிசெட்டி மிகப்பெரிய இயக்குனர் . அவர் பழகும் விதம் அவ்வளவு எளிமையாகவும் அன்பாகவும் இருக்கும் . அதே குணம் அவரது பிள்ளைகளுக்கும் . ‘அண்ணே… அண்ணே…’ என்று ஆதி என் மேல் பொழியும் அன்புக்கு எல்லையே இல்லை . படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும்  மேக்கிங் இரண்டிலும் அசத்தி இருக்கிறார் சத்ய பிரபாஸ் ” என்றார்.IMG_8571

கிட்டி பேசும்போது “நானும் நாசரும் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக நண்பர்கள். சினிமாவில் ஒன்றாக நடித்து இருக்கிறோம் . மணிரத்னம் இயக்கிய படங்களில் ஒன்றாக நடித்த அனுபவம் எங்களுக்கு உண்டு . சத்ய பிரபாசுக்கு இது முதல் படம் .  அவர் படத்தை  இயக்கும் விதத்தை நேர்த்தியை பார்க்கும்போது இன்னொரு ஆரம்பகால மணிரத்னத்தை பார்ப்பது போலவே இருகிறது.

ஆதியின் உழைப்பு அபாரமானது. 63 படங்களை இயக்கிய பின் தயாரிப்பாளராக ஆன நிலையிலும் மூத்த மகன் இயக்க இளைய மகன் நடிக , தான் தயாரிக்கும் படம் என்றாலும் ஒரு நாளும் ரவிராஜா பினிசெட்டி ஒரு நாளும் செட்டுக்குள் வரவில்லை . பாராட்டுக்குரிய விஷயம் அது ” என்றார் .

“என்னை தெலுங்கில் அறிமுகப்படுத்தியவர் ரவிராஜா பினிசெட்டிதான் . இன்று வரை என் வண்டி தெலுங்கில் ஸ்டெடியாக ஓடக் காரணம் அவர்தான் ” என்று ஆரம்பித்து , ரவி ராஜா பினிசெட்டி , சதய பிரபாஸ் , ஆதி மூவரையும் பாராட்டிப் பேசிய நாசர், தொடர்ந்து ” இந்தப் படத்துக்கு முக்கியத் தூணாக இருக்கும் ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரத்தை நான்தான் இந்த யூனிட்டுக்கு அறிமுகபடுத்தினேன் . அவர் மிக சிறப்பாக பணியாற்றி இருப்பது சந்தோஷமாக இருக்கிறது ” என்றார்


IMG_8514

ஆதி தனது பேச்சில் “இது எனக்கு ஆறாவது படம்.நான் படங்களைத் தேர்ந்தேடுத்தே நடிப்பவன். இப்படத்தில்  அண்ணனின் இயக்கத்தில் நடித்தது எனக்கு சௌகரியமாக இருந்தது இது வழக்கமான ஹீரோ ஹீரோயின்,வில்லன் பார்முலா கதையல்ல கண்முன் காண்கிற யதார்த்த மனிதர்களின் கதை.
மிகைப் படுத்தலோ போலியான பாசாங்கோ இருக்காது. இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான கதையாக இருக்கும். அண்ணனின் திறமையை நாமே அங்கீகரிக்கா விட்டால் வெளியே எப்படி அங்கீகரிப்பார்கள் என்பதால் அப்பாவையே தயாரிக்க சொன்னேன்  ”என்றார்.
படத்தின் இயக்குனர் சத்ய பிரபாஸ் பேசும்போது ” எனக்கு இந்தப் படம் கிடைக்க காரணம் என் தம்பி அப்பாவிடம் அழுத்தமாக சொன்னதுதான் . அப்பா நான் கேட்டது எல்லாம் கொடுத்தார் . எனவே விரும்பியபடி படத்தை எடுக்க முடிந்தது . ரவிராஜா பினிசெட்டியின் மகன் , ஆதியின்  அண்ணன் என்பது தவிர எனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள கடுமையாக உழைத்து உள்ளேன் .
ஆதி,  நாசர், கிட்டி, பசுபதி, நரேன், ரிச்சா, நிக்கி  போன்றவர்கள் மிக சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள்.மிதுன் சக்கரவர்த்தி சார் இந்தப் படத்துக்கு கூடுதல் கவனம் கொடுத்து இருக்கிறார் . அற்புதமாக நடித்து உள்ளார்.  ஒளிப்பதிவாளர் சண்முக சுந்தரம், எடிட்டர் சாபு ஜோசப் , கலை இயக்குனர் அமரன் போன்றவர்கள் தங்கள் பங்கு சிறப்பாக வர வேண்டும் என்பதை விட , காட்சி அமைப்பும் இயக்கமும் சரியாகப் பெயர் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் என் பணி பெரிதாக வெளிப்படும்படி உழைத்தனர் .
அற்புதமான இசையை மூன்று இசை அமைப்பாளர்களும் கொடுத்துள்ளனர்
IMG_8528
முதலில் நினைத்த படத்தை நினைத்த மாதிரி எடுப்பது அதன் பிறகுதான் வியாபாரம் யாருக்கும் எதற்கும் சமரசம் ஆக வேண்டாம் என்று இருந்தேன் . அப்படி எடுத்து முடித்த உடன் நான் குளோபல் யுனைடெட் லிமிடெட் நிறுவனத்தை அணுகினேன்.
மிகப் பெரிய  நடிகர்கள் , இயக்குனர் அடங்கிய படங்களைத்தான் வாங்குவேன் என்று இருந்த அவர்கள்,  ஜஸ்ட் நட்புக்காக  மட்டுமே படம் பார்க்க வந்தனர் . ஆனால் போட்டுக் காட்டிய போது பிடித்துப் போய் வாங்கி விட்டனர்.  மிக்க மகிழ்ச்சி ” என்றார் .
படத்தின் முன்னோட்டம் வண்ணமயமாக ஒரு பெயிண்டிங் போல , அழகாக– அதே நேரம் திரில்லாக இருந்தது.   அதற்கு ஏற்ப பாசிடிவ் பேலன்ஸ் ஆக , பாடல்களை மிகவும் ரசித்து அழகாக எடுத்து இருந்தார் இயக்குனர் .
குறிப்பாக சோக்கான பொண்ணு பாடலில் பாரத நாட்டிய உடை அணிந்த நடன பெண்களின் — டோகோமோ நாய்க்குட்டி மாதிரி பின் தொடரும் — நடனமும் , அதற்கேற்ற ரசனையான கேமரா கோணங்களும் அருமை .எதிர்ப்பர்ப்பைத் தூண்டும் ‘யாகாவராயினும் நா  காக்க ‘ குழுவுக்கு வாழ்த்துகள்! திருக்குறள் அடியில்  இருந்து பெயர் வைத்ததற்கு பாராட்டுகள் !

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →