சினிமாக்காரன் நிறுவனம் சார்பில் வினோத் குமார் சென்னியப்பன் தயாரிக்க, ஆதித்யா பாஸ்கர், அம்மு அபிராமி, வினோத் கிஷன், அபிராமி வெங்கடாச்சலம், டெல்லி கணேஷ், லீலா சாம்சன் நடிப்பில் ஏ எம் ஆர் முருகேஷ் இயக்கி, ஆஹா ஓ டி டி தளத்தில் காணக் கிடைக்கும் படம்.
காதலித்த நபர் வசதி காரணமாக தன்னைப் புறக்கணித்து வேறு நபரை மணந்து கொண்டதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலைக்கு முயன்ற ஓர் ஆணும் (ஆதித்யா பாஸ்கர்) ஒரு பெண்ணும் ( அம்மு அபிராமி) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உரிர் பிழைக்கும் நிலையில் அங்கே அவனுக்கு அவள் மேல் காதல் வருகிறது
பிராமணப் பெண்ணை ( அபிராமி வெங்கடாச்சலம்) காதலித்து பிராமண மாமனாரின் எதிர்ப்பை மீறி மணந்து சந்தோஷமாக வாழும் ஒரு கிறித்தவ இளைஞன் (வினோத் கிஷன்) வாழ்வில் பேரிடியாக, அவளுக்கு மூளை செயலிழப்பு நோய் வருகிறது . . கோபத்தில் புறக்கணித்து விட்ட தனது பிராமண அப்பாவைப் பார்க்க வேண்டும் என்கிறாள் அவர் .
கல்யாணம் செய்து நாற்பது வருடம் வாழ்ந்த அந்த தம்பதியில் ( டெல்லி கணேஷ் – லீலா சாம்சன்), மனைவிக்கு புற்று நோய் வர, வசதியாக இருக்கும மகன் காப்பாற்ற மறுக்க, ஏழு லட்சம் பணம் இருந்தால் போதும் என்ற நிலையில் பணத்துக்கு அலைகிறார் கணவர் .
இவர்களுக்கு என்ன நடந்தது என்பதே இந்த வான் மூன்று
நெஞ்சில் ஓர் ஆலயம், நீர்க்குமிழி பாணியில் மருத்துவமனை அதைச் சுற்றிய சூழலில் வந்திருக்கும் படைப்பு
நிதானமான அழுத்தமான பக்குவமான காட்சிகள் நிறைந்து இருக்கிற படம்.
சிறப்பான திரைக்கதை .
ஒவ்வொரு வானின் முடிவும் மகிழ்ச்சியோ நெகிழ்ச்சியோ தருகின்றன .
கிளைமாக்ஸ் கடற்கரைக் காட்சியும் வசனமும் காவியம் .
நடிப்பில் டெல்லி கணேஷ் அசத்தி இருக்கிறார். லீலா தாம்சனும் ஈடு கொடுக்கிறார்.
அம்மு அபிராமியின் பெஸ்ட் இதுவரை இதுதான் . அருமை .
மற்றவர்களும் குறை சொல்ல முடியாத பங்களிப்பைக் கொடுத்துள்ளனர்
சார்லஸ் தாமஸ் ஒளிப்பதிவு உணர்வுகளுக்கு பலம் சேர்க்கிறது ஆர் 2 புரோஸ் இசை, அஜய் மனோஜ் படத்தொகுப்பு இவையும் நேர்த்தி
மூளை செயலிழப்பு பெண்ணுக்கு குழந்தை பிறப்பது சினிமா
இன்னும் நல்ல வசனங்கள் ஆங்காங்கே காமெடி இன்னும் சிறப்பான காட்சிகள் இருந்திருந்தால் படம் மேலும் அசத்தி இருக்கும் . எனினும் இப்போதும் குறையில்லை.
வான் மூன்று … பளிச்
