லக்ஷனா பிக்சர்ஸ் சார்பில் கே. ரவீந்திரனும், பவர் டூல்ஸ் மீடியா சார்பில் இம்மானுவேலும் தயாரிக்க
அனுஹாசன், நாசர், பாலா சிங், ஜெயபாலன் நடிப்பில் என் டி நந்தா ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கும் படம் வல்லதேசம் . இது ரசிப்பதற்கு நல்ல தேசமா ? பார்க்கலாம் .
இந்தியாவில் பல்வேறு இடங்களில் கெமிக்கல் வெடிகுண்டுகளை வெடித்து நாட்டையே ஸ்தம்பிக்க செய்கிறது ஒரு சர்வ தேச தீவிரவாத அமைப்பு .
அந்த விஷயம் நமது ராணுவத்துக்கு தெரிய வர, திட்டம் முறியடிக்கப் படுகிறது .
இதனால் கோபம் கொள்ளும் தீவிரவாத அமைப்பு ஒரு குறிப்பிட்ட நபர் மூலம்தான்,
ரகசியம் ராணுவத்துக்குப் போயிருக்க வேண்டும் என்று,
அவரையும் அவர் மனைவி (அனுஹாசன்) மற்றும் மகளை (சிறுமி அக்ஷரா ) கொலை செய்ய முயல்கிறது . அந்தக் குடும்பம் லண்டனுக்குப் போய் தங்க ,
தீவிரவாத கும்பல் அங்கே போய் அந்த நபரை சுட்டுக் கொல்கிறது .
அவர் மனைவியையும் சுடுகிறது . குழந்தை தப்பிக்கிறாள் .
ஆனால் உண்மையில் சர்வதேச வெடிகுண்டுக் கும்பலின் திட்டத்தை ராணுவத்திடம் உளவு சொன்னது கொல்லப்பட்ட நபர் அல்ல . எனில் யார் ?
சுடப்பட்ட மனைவியின் நிலை என்ன ? தப்பிய குழந்தையின் கதி என்ன ?
குழந்தை தீவிரவாதக் கும்பலின் கைகளில் சிக்கியதா ? ஆம் எனில் நடந்தது என்ன ? இல்லை எனில் அமைந்தது என்ன ? என்பதே வல்லதேசம் .
பழகிய பழைய கதை . நாசர் போன்ற நடிகர்கள் வீணடிக்கப்பட்டு உள்ளனர் . பலரும் செயற்கையாக நடிக்கிறார்கள் .
கிளைமாக்சில் இது போன்ற கதைகளுக்கு இருக்க வேண்டிய அடிப்படை நோக்கம் மிஸ்ஸிங் .
அதே நேரம் உண்மையான உளவாளி டேவிட் அல்லாத யார் என்று சொல்லும் இடம் ஓரளவு யூகிக்க முடியும் என்றாலும் சுவாரஸ்யம்தான் .
நாட்டுக்காக சண்டையிட்டு வெற்றியோ அல்லது உயிர்த் தியாகமோ செய்கிற கதாபாத்திரமாக ஓர் ஆண்தான் இருப்பான் .
அதை ஒரு பெண்ணுக்கு கொண்டு பொய் இருப்பதை பாராட்டலாம் .
பொதுவாக அயல்நாடுகளில் நம் நாட்டு நடிகர்களை வைத்தோ வெளிநாட்டு நடிகர்களை வைத்தோ எடுக்கும்போது இது நம்ம ஊர்ப் படம் என்பது எப்படி தெரியும் .
ஆனால் இந்தப் படத்தில் ஒரு நிஜமான ஹாலிவுட் படத்தில் நம்ம நடிகர்களை பார்த்தால் எப்படி இருக்கும் ? அப்படி ஒளிப்பதிவு செய்து ஷாட் வைத்திருக்கிறார் என். டி . நந்தா .