ஹாலிவுட் வில்லன் நடிக்கும் ‘இது வேதாளம் சொல்லும் கதை ‘

veda 1

சுமார் 40 லட்சம் பேர் இணையத்தில் பார்த்த கொடைக்கானல் ஓண்ட் மியூசிக் வீடியோவை இயக்கியவர் ரதிந்தரன் ஆர் பிரசாத்

ஹாலிவுட் மற்றும் பாலிவுட் பிரபலங்களான நிகி மினாஜ், ஆஷ்டன் குட்சர், ஷேகர் கபூர் ஆகியோர் மேற்படி கொடைக்கானல் ஓண்ட் வீடியோவை பாராட்டி உள்ளனர். 

ரதிந்திரன் பிரசாதின் 30 நிமிட குறும்படம் ‘ஸ்வேயர் கார்ப்பொரேஷன்’ (Swayer corporation) கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வானது குறிப்பிடத்தக்கது.
ரதிந்தரன் ஆர் பிரசாத் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். அதற்கு ‘இது வேதாளம் சொல்லும் கதை’ என்று பெயர் இடப்பட்டுள்ளது.
veda 2
இதில் அஷ்வின் (இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜீரோ), மற்றும் குரு சோமசுந்தரம் (ஆரண்ய காண்டம், ஜோக்கர்) இணைந்து நடிக்க உள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இத்திரைப்படத்திற்கான இசைப்பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். பிரபல ஹாலிவுட் நடிகரும், மல்யுத்த வீரருமான க்ரெக் ப்யூரிட்ஜ்( Greg Burridge)
இப்படத்திற்கான சண்டை காட்சிகளை வடிவமைத்து, வில்லனாகவும் நடிக்க உள்ளார். இத்தாலியை சேர்ந்த ராபெர்டோ ஜாஜெர் (Robertto Zazzara) இப்படத்திற்கான ஒளிப்பதிவு பொறுப்பை ஏற்றுள்ளார். 

veda 3

முதல்கட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் இம்மாதம் துவங்க உள்ளது. தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
சண்டை காட்சிகளுக்காக அஷ்வின் உட்பட 30 மல்யுத்த வீரர்களுக்கு க்ரெக் ப்யூரிட்ஜ் பயிற்சி அளிக்கிறார். 

ஹோல் வைட் ஓர்ல்ட் ஃபிலிம்ஸ் சார்பில் பஸாக் கேஸியர் பிரசாத் (Basak Gazier Prasad) படத்தைத் தயாரிக்க உள்ளார்.

 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *