சாய்ராம் கல்விக் குழுமம் லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சி

sai 4

சாய்ராம் கல்விக் குழுமங்களின்  நிறுவனர் மறைந்த MJF லயன் லியோ முத்து அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி,

சென்னை மேற்கு தாம்பரம், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் உள்ள லியோ முத்து உள் விளையாட்டு அரங்கில் நடந்தது .

லியோ முத்துவின் சிலை நிறுவலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது .
1300 அநாதை குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன . 
இந்த கல்வி சேவை   இவர்களுக்கு புதிது இல்லை .
லியோ முத்து அறக்கட்டளை சார்பாக 2014 -15 ஆம் ஆண்டில் தகுதி வாய்ந்த  மாணவர்களுக்காக கல்வி உதவித் தொகையாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  பயனடையும் விதத்தில் 27, 15, 000 ரூபாய் வழங்கப்பட்டது . 
sai 32015 – 16 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக  50, 00, 000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது 
இதோடு மட்டுமல்லாது அறம் அறக்கட்டளை சார்பாக கடந்த நான்கு  ஆண்டுகளாக ஐம்பது பேருக்கும் , கடந்த மூன்று ஆண்டுகளாக சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் வருடா வருடம் பரிந்துரைக்கும் பத்து பேருக்கு ,
இலவச கல்வியும் வழங்கப்படுகிறது . இதில் இலவச தாங்கும் வசதி, , உணவு பாடப் புத்தகங்கள் ஆகியவையும் அடங்கும் 
இந்த நிலையில் இப்போது நடைபெற்ற லியோ முத்து நினைவேந்தல் நிகழ்ச்சியில், கம்யூனிஸ்டு தலைவர் தா. பாண்டியன் . அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ், கல்வியாளர் கிறிஸ்டோபர் காந்தி, நடிகர் மயில்சாமி, 
sai 2
இவர்களுடன் சாய்ராம் கல்விக் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சாய் பிரகாஷ் லியோ முத்து ,  அவரது துணைவியார் கலைச்செல்வி லியோ முத்து, மகள் சர்மிளா ராஜா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், 
மேலும் ஆர் எம் கே கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆர் எஸ் முனிரத்னம், ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் . 
நிகழ்ச்சியில் பேசிய சாய் பிரகாஷ் லியோ முத்து “இந்த நினைவேந்தலை குடும்ப விழாவாக நடததலாம் என்று முதலில் யோசித்தோம். அப்புறம்தான் இதை கல்வி விழாவாக நடத்த முடிவு செய்தோம் . 
அப்பாவுக்கு ரஜினியை ரொம்ப பிடிக்கும் . ஆனால் அது வெளியே பலருக்கு தெரியாது . ரஜினி நடித்த ‘எட்டு எட்டா  மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ பாட்டு’ அவருக்கு ரொம்ப பிடிக்கும் .
sai 4
அவர் என்னிடம் ‘ உலகம் சுற்ற வேண்டிய அந்த எட்டை மட்டும் நான் மிஸ் பண்ணிட்டேன். இனிமே போகணும்’ என்றார் . அதற்குள் உடல் நலிவுற்றது . எனவே அவரது நினைவிடத்தை எண்கோண வடிவில் அமைக்கிறோம் 
கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் சாய்ராம் பொறியியல் கல்லூரி  நல்ல தேர்வு ரிசல்ட் காட்டும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் டாப் டென் லிஸ்டில் இருக்கிறது .
எங்களிடம் இலவச கல்வியில் படித்த ஒரு மாணவி இப்போது வருடம் ஆறு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் பணியில் இருக்கிறார் .
அந்த குடும்பம் நன்றி சொல்ல வந்தபோது பேச வார்த்தையின்றி கண்ணீராலேயே நன்றி சொன்னது . 
கல்விப் பணியிலும் சமூகத் தொண்டிலும் அவ்வளவு சிறப்பாக இருந்தவர் எனது தந்தை லியோ முத்து .
sai 3என்னதான் பிரபு சிறப்பாக நடித்தாலும் சிவாஜி மாதிரி வராது  என்று  சொல்லி விடுவார்கள் . நான் என்னதான் செய்தாலும் அப்பா  மாதிரி வராது.
எனவே அப்பாவின் வழியில்  அவரது பெயரைக் காப்பாற்றும்படி தொடர்ந்து செயல்படுவதே எனது எண்ணம்  ” என்றார் . 
தா. பாண்டியன் பேசும்போது “இந்த அரங்கில் அப்துல் கலாம் . லியோ முத்து இருவரின் படங்களை பார்க்கும்போது எனக்கு பல சம்பவங்கள் நினைவுக்கு வருகிறது . 
அப்துல் கலாமை  முதன்  முதலில் ஜனாதிபதியாக  வாஜ்பாய் பரிந்துரைத்தபோது உடனே சோனியா காந்தி அதை ஏற்றார் . ஆனால்  நம்ம  ஊர் அரசியல்வாதிகள் கள்ள மவுனம் சாதித்தார்கள் . 
sai 5அவரை இரண்டாவது முறை ஜனாதிபதியாக்க பிஜேபி விரும்பியது . காங்ரகிசும் ஏற்றது . ஆனால் நம்ம ஊர் அரசியல் தலைவர்கள் கள்ளத்தனமாக அதை எதிர்த்தார்கள் .
இரண்டு முறையும் அப்துல் கலாமுக்கு ஆதரவாக இருந்தவன் நான் . 
அதே போல  , மறைந்த லியோ முத்து திருத்துறைப் பூண்டியில் ஒரு பெண்கள் மேல் நிலைப்பள்ளி கட்ட போதுமான இடத்தை இலவசமாக கொடுத்தும் அதை ஏற்க மறுத்து சிலர் தடை போட்டுக் கொண்டு இருந்தார்கள் . 
அதில் எங்கள் கட்சி ஆட்கள் சிலரும் இருந்தார்கள் . அதையும் மீறி பெருந்தன்மையாக லியோ முத்து அந்த இடத்தைக் கொடுத்தார் ” என்றார் 
sai 1
ஆர் எம் கே கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ஆர் எஸ் முனிரத்னம் பேசும்போது “பத்து ஆண்டுகளாக சாய்ராம் பொறியியல் கல்லூரி ,
 நல்ல தேர்வு ரிசல்ட் காட்டும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் டாப் டென் லிஸ்டில் இருப்பது போல இனியும் இருக்கும் . அப்பா லியோ முத்து செய்தது போல மகன் சாய் பிரகஷாலும் செய்ய முடியும்” என்றார் 
ஜெயா கல்வி குழுமங்களின் நிறுவனர் டாக்டர் கனகராஜ் பேசும்போது “மறைந்த லியோ முத்து மிகச் சிறந்த மனிதாபிமானி. அதே நேரம் துணிச்சல் மிக்கவர் .
சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் சங்கக் கூட்டங்களில் அதன் தலைவராக இருந்த ஜேப்பியாரிடம் துணிச்சலாக பல விசயங்களில் வாதாடுவார் ” என்றார் 
sai 2அகரம் பவுண்டேஷன் சார்பில் பேசிய ஜெயஸ்ரீ , ” அகரம் குறிப்பிடும் மாணவர்களுக்கு இலவச கல்வி தர லியோ முத்து அவர்கள் சம்மதித்து , அது செயல்பாட்டுக்கு வந்த பிறகு,  
ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டு இருந்த போது ‘நல்லா  படிக்கிற மாணவர்களுக்கு இலவச கல்வி தர்றோம் . ஓகேதான் . 
ஆனா தானாவே நல்லா படிக்காத ஏழை மாணவர்களுக்கு என்ன செய்யலாம்>’ என்று கேட்டார் . அவர்களுக்கு ஒரு டிரைனிங்  தரும்படியாக  கல்வி நிறுவனம் அமைக்கலாம் என்று முடிவானதும் ,
மதுராந்தகத்தில்  தேசிய  நெடுஞ்சாலையை  ஒட்டி ஒரு ஏக்கர் நிலத்தை அகரம் நிறுவனத்துக்கு அவர் இலவசமாக  கொடுத்துள்ளார் ..  விரைவில் அங்கே  வேலைகள் துவங்கும் .
sai 1
லியோ முத்து அவர்களின்   தொலைநோக்குப் பார்வை அற்புதமானது . ” என்றார் .
அப்துல்கலாமின் உதவியாளர் பொன்ராஜ் பேசும்போது ” ஒரு முறை லியோ முத்துவிடம் பேசிக் கொண்டு இருந்தபோது எம் ஜி ஆர் மீதும் அப்துல்கலாம் மீதும் அவருக்கு iஇருந்த  பற்றை எண்ணி வியந்து போனேன் . 
அதை சொன்ன நிலையில் இந்த கல்லூரிக்கு வந்தார் அப்துல் கலாம். 
பொதுவாக தினசரி 200 பேரையாவது சந்திப்பார் அப்துல் கலாம். எல்லோரிடமும் அன்பாக பேசுவார் . ஆனால் தன்னை சந்தித்த நபர்களில் மிக சிலரைப் பற்றி மட்டுமே உணவு சாப்பிடும்போது வியந்து பாராட்டிப் பேசுவார் .
அப்படி அப்துல் கலாம் வியந்து பாராட்டிய ஒரு சிலரில் லியோ முத்துவும் ஒருவர் . 
லியோ முத்துவின் மகனான  சாய் பிரகாஷும் தன் அப்பாவைப் போன்றவரே . 
அப்துல் கலாம் வந்திருந்தபோது, உடன் லியோ முத்து மற்றும் சாய்  பிரகாஷ்
அப்துல் கலாம் வந்திருந்தபோது, உடன் லியோ முத்து மற்றும் சாய் பிரகாஷ்

இப்போது வருடா வருடம் லட்சக்கணக்கான எஞ்சினியர்கள் படித்து முடித்து வெளியே வருகிறார்கள் . இந்த சாய்ராம் கல்லூரி மாணவர்களுக்கு இவர் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை வாங்கி கொடுத்து விடுகிறார் .

மற்ற கல்லூரிகள் ? இங்கு வேலை வாய்ப்பு குறைவு . வெளிநாடுகளும் இந்தியர்களுக்கு வேலை  விசா  தருவதில் பல  கட்டுப்பாடுகளை கொண்டு வந்து விட்டன. அப்படியானால் வேலை யார் தருவது ?
இவற்றை ஒருங்கிணைத்து எல்லோருக்கும் வேலை தரும்படி சூழலை உருவாக்கும் ஆராய்ச்சிக்கான திட்டம் ஒன்றை சொன்னேன். உடனே அதற்கு என்று 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார் . 
கல்வி மற்றும் சமூகப் பணியில் மறைந்த லியோ முத்துவைப் போலவே , சாய் பிரகாஷ் லியோ முத்துவும் வருவார் என்பதற்கு இதுவே சாட்சி ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *