வெங்கடேஷ் ராஜாவின் “வெங்கிஸ் பிலிம் இண்டர்நேஷனல்”

venki 3

தனது ‘தி வைப்ரன்ட் மூவீஸ்’  சார்பில் பல  படங்களை வெளியிட்டவர் வெங்கடேஷ் ராஜா. 

அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்திகளைக்  கையாண்டு பல வருடங்களுகளாக  பல படங்களுக்கும் துணை நின்ற  இவர் , 

அந்த வகையில் ஆள், வெண்ணிலா வீடு, ஒரு பந்து நாலு ரன் ஒரு விக்கெட், புலன் விசாரணை 2, ஐவராட்டம் , புத்தனின் சிரிப்பு, சி எஸ் கே , (சார்லஸ் ஷஃபி கார்த்திகா),

புத்தனின் சிரிப்பு , பேபி , திருட்டு விசிடி  ஆகிய படங்களை வெளியிட்டார் .

இவற்றில் வெண்ணிலா வீடு, சி எஸ் கே ஆகிய படங்கள் உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டவை. 

வெங்கடேஷ் ராஜா தற்போது “வெங்கிஸ் பிலிம் இண்டர்ஷநேனல்” என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளார் 

இது பற்றிக் கூறும் வெங்கடேஷ் ராஜா, “தி வைப்ரன்ட் மூவீஸ்’  நிறுவனத்தின் பங்குதாரர்கள் நட்பு ரீதியாக விலகி விட்டனர். எனவே இனி அதே பெயரில் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தேன் 

“வெங்கிஸ் பிலிம் இண்டர்ஷநேனல்” என்ற நிறுவனத்தை ஆரம்பித்து  உள்ளேன்  

venki 1

வெங்கிஸ் பிலிம் இண்டர்ஷநேனல்  தனது முதல் படைப்பாக WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட்  என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த,

 “மோ” திரைப்படத்தை உலகமெங்கும் விமர்சையாக  வெளியிடுகிறது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் இந்தப் படத்தில், 

சன் மியூசிக் தொகுப்பாளர் (VJ) சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த  ஐஸ்வர்யா ராஜேஷ்,

இறைவி  மற்றும் குற்றமே தண்டனை படத்தில் நடித்துள்ள பூஜா தேவரியா, சூது கவ்வும், நேரம் ஆகிய  திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக்,   

யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, முண்டாசுபட்டி படத்தில் நடித்த ராமதாஸ்  (முனீஸ்காந்த்), யோகி பாபு,

மெட்ராஸ் மற்றும் மாரி படங்களில் நடித்த மைம்  கோபி, ராஜதந்திரம்படத்தில் நடித்த சிவா ஆகியோர்  நடிக்கின்றனர்.

venki 2 

புவன் நல்லான் R என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வா மற்றும்ஹோசிமின்  ஆகியோரிடம் உதவியாளராகப்  பணிபுரிந்தவர். 

ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணைஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ஸ்ரீ k ஒளிப்பதிவு செய்ய, 

இனிமே இப்படிதான் படத்தின் இசைஅமைப்பாளரும்,                                                                                                            

A R ரகுமானின் உதவியாளருமான சமீர் d சந்தோஷ் இசையமைக்கிறார். கலை – பாலசுப்ரமனியன், படத்தொகுப்பு – கோபிநாத்.

இத்திரைப்படத்தின் வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் 

மேலும் நல்ல பலதரமான படங்களை வாங்கி வெளியிடும் திட்டம் உள்ளது 

அதோடு வெகு விரைவில் படங்களைத் தயாரிக்கவுள்ளதாகவும் இருக்கிறேன் ” என்கிறார் 

வாழ்த்துகள் ! 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *