
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன் மற்றும் அவரது மனைவி சுதா இருவரும் தயாரிக்க,
ரிச்சர்டு – மனோ சித்ரா இணையராக நடிக்க, நிழல்கள் ரவி, தலைவாசல் விஜய், மனோபாலா, சாம்ஸ் வையாபுரி, முத்துக் காளை, தியாகு, நெல்லை சிவா ஆகியோர் உடன் நடிக்க ,
டி. ஆர் .எஸ் .ரமணி அய்யர் என்பவரின் கதை வசனம் பாடல்களில் எஸ் பி எல் செல்வதாசன் இசையில்
எஸ் பி ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் திரைக்கதை அமைத்து இயக்கும் படம் அந்தமான்,
தயாரிப்பளர் கண்ணதாசன் வில்லனாக அறிமுகமாகும் இந்தப் படத்தில்,
செல்வதாசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
ரமணி அய்யர் எழுத்தாளர் பால குமாரனை மானசீக குருவாக ஏற்றவர். முப்பது வருடங்களாக பாலகுமாரனின் வாசகர் . .
அந்தமான் படத்தில் தான் எழுதிய பாடல்களை பாலகுமாரனுக்குப் போட்டுக் காட்டி அவரது பாராட்டுக்களையும் ஆசிகளையும் பெற்றவர்
கூல் ஜெயந்த் நடனம் அமைக்க , ஆர் எஸ் .செல்வா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம் சென்னையிலும் அந்தமானில் இதுவரை எந்தப் படத்தில் இடம்பெறாத பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.
கப்பலில் ரிச்சர்டும் கண்ணதாசனும் மோதும் சண்டைக் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது .
படத்தில் வரும் ஆறு பாடல்களில் கானா பாலா பாடியுள்ள “காலை மாலை தெரியாமல் குடிக்கிற மனுஷா ” என்ற பாடல் குடிப்பழக்கததைக் கண்டிக்கும் பாடலாக வந்துள்ளது .
இதே போல அப்பா அம்மா செண்டிமெண்ட் பாடல், காதல் பாடல் என்று வெரைட்டியான பாடல்கள் .
படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் சங்கப் பிரதிநிதிகளான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பி எல் தேனப்பன், ஃபைவ் ஸ்டார் கதிரேசன் மற்றும் இயக்குனர் பவித்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
அவர்கள் பேசும்போது ” சிறிய படங்களை தயாரிப்பவர்கள் அனுபவம் உள்ள தயாரிப்பாளர்களை அணுகி அவர்களது ஆலோசனைகளைப் பெற்றால் தயாரிப்பு செலவைக் குறைக்கலாம் ” என்றார்கள்.
படத்தில் நடித்துள்ள மனோபாலா வையாபுரி , சாம்ஸ் ஆகியோர் பேசும்போது ” அந்தமானில் தயாரிப்புத் தரப்பு எங்களை நன்கு கவனித்துக் கொண்டது .
சம்பளத்தை பைசா பாக்கி வைக்காமல் அன்றன்றே கொடுப்பார்கள் . கண்ணதாசன் மிகச்சிறந்த மனிதர் ” என்றார்கள் .
நடன இயக்குனர் கூல் ஜெயந்த் பேசும்போது “இந்தப் படத்துக்குப் பிறகு ரிச்சர்டு மிகச் சிறந்த வெற்றிகரமான கதாநாயகனாக உயருவார் ” என்றார் .