விஜய் ஆண்டனி – பிரணவ் மோகன் நடிப்பில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘ தமிழரசன்’

SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்க, விஜய் ஆண்டனி -மாஸ்டர் பிரணவ் நடிக்க
 
இசைஞானி  இளையராஜா இசையில் பாபு யோகேஸ்வரன் இயக்கும் படம் தமிழரசன்.
 
திமிர் புடிச்சவன் படத்துக்கு பிறகு இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜய் ஆண்டனி .
 
மாஸ்டர் பிரணவ் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் . 
 
எடிட்டர் மோகன்   தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குனராகவும்,  ரவியை ஜெயம்ரவியாகவும் வெற்றி பெற செய்திருக்கிறார்.
 
அவர்களும் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் நம்பி களம் இறக்கி இருக்கிறார்கள்.
 
ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே டிக் டிக் டிக் படத்தில் நடிகராக களம் இறங்கி  வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்போது தமிழரசன் மூலம் பிரணவ் மோகன் நடிக்க வருகிறார் . 
 
தமிழரசன் பட பூஜையில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்,
 
கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.
விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, ”இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது. 
 
இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்” என்று வாழ்த்தினார்.
 
 
 
 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *