மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள அந்தாலஜி படமான ‘விழித்திரு’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது
.படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த ராகுல் பாஸ்கரன் நடித்துள்ளார்.
இவர் மதுரையைச் சேர்ந்தவர். இயக்குனர் மீரா கதிரவன், ராகுல் பாஸ்கரின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.

நடிகர் ராகுல் பாஸ்கரன் , ” பணக்கஷ்டம் என்றால் என்னவென்று கொஞ்சம் கூட தெரியாத, ஒரு பெரிய கோடிஸ்வரரின் மகனாக இப்படத்தில் நடித்துள்ளேன்.
பிரபல மாடலான எரிக்கா பெர்னாண்டஸுடன் ஜோடியாக நடித்துள்ளேன்.
பல கதைகள் ஒன்று சேரும் இப்படத்தில் எனது கதை சிறப்பாக இருப்பதாக படத்தை ஏற்கனவே பார்த்த பலர் கூறியுள்ளனர் .

சினிமாவில் எனது முன்மாதிரி விஜய் சேதுபதி அண்ணா தான். கீழிருந்து போராடி பெற்ற அவரது வளர்ச்சியை போல் என் வளர்ச்சியும் இருக்கு வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
இயக்குனர் மீரா கதிரவன் அவர்களுக்கு என்றுமே நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவரது மனவலிமைக்கு ஒரு பெரிய சன்மானம் கிடைக்கும்.
ரிலீசுக்கு முன்பு ‘விழித்திரு’ படத்தை பார்த்தவர்கள் தந்த பாராட்டுக்கள் ரிலீசுக்கு பிறகும் தமிழ் சினிமா ரசிகர்களிடமிருந்தும் வரும் என நம்புகிறேன் ” என்கிறார்