ஆடி கார் வாங்கிய விசயத்தில் வரி ஏய்ப்புக்காக பாண்டிச்சேரியில் போலி முகவரி கொடுத்து வருமான வரித் துறையிடம் அமலா பால் சிக்கி இருக்கும் விவகாரம்,
பலரின் பல்லிலும் விழுந்து நாக்கில் நடனமாடிக் கொண்டுதான் இருக்கிறது .
எதுக்கு இந்த அல்பத்தனம் என்று பலரும் … விவரம் புரியாம மாட்டிகிட்டார் அமலா பால் என்று சிலரும் சொல்லி வரும் வேளையில்,
சினிமாக்காரர்கள் பெரும்பாலும் தர்ம சங்கடம் காரணமாக அமைதி காக்கிறார்கள் .
ஆனால் அந்த லிஸ்டில் கஸ்தூரி இல்லை . 
டுவிட்டரில் அமலா பாலை மறைமுகமாக கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்
எனக்கு உண்மையாவே பாண்டியில விலாசம் இருக்கு, வண்டி வாங்கத்தான் வக்கில்ல !
என்று ஒரு ட்வீட் .
இங்கே ஒரு பழைய santro . அங்கே ஒரு jazz . ரெண்டுமே சாதா குட்டி காருதான். !
என்று ஒரு டுவீட் .
இரண்டுக்கும் முன்னதாக,
சென்னையில் ஓடும் ஆடம்பர கார்களில் முக்கால்வாசி பாண்டியில் பதிவுசெய்யப்பட்டவை. எல்லா பணக்காரர்களுக்கும் பாண்டிச்சேரிதான் ஜாகையா?
– என்று பொதுவாக ஒரு டுவீட் .
ஆக ஆரம்பத்தில் பொதுவாக பேசிய கஸ்தூரி போகப் போக அமலா பாலை நேரடியாகவே கடைந்து விட்டார் .
ம்ம்ம்ம் . கண்டின்யூ மியூசிக் !