வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின்; ஷாக்கான ஹீரோ – ‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்

maan 4
சுதா மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.கண்ணதாசன்  தயாரிக்க, கதாநாயகனாக ரிச்சர்ட், கதாநாயகியாக மனோசித்ரா, 
இவர்களுடன் மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், மீரா கிருஷ்ணன், அறிமுக வில்லன் கண்ணதாசன், முத்துக்காளை,
நெல்லை சிவா, போன்டா மணி, கிரேன் மனோகர், சிசர் மனோகர், லொள்ளுசபா மனோகரன் ஆகியோர் நடிக்க, 
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் இயக்கும்  படம் அந்தமான் 
கதை, வசனம், பாடல்கள் டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர் எழுதுகிறார். எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையமைக்க, ஆர்.செல்வா ஒளிப்பதிவு செய்கிறார். கூல் ஜெயந்த் நடனம் அமைக்க,
maan 2
ஜி.ஆர்.அனில் மல்நாட் எடிட்டிங் செய்கிறார். ராக் பிரபு சண்டைப்பயிற்சி அளிக்க, சுந்தர்ராஜன் கலையை நிர்மாணிக்கிறார்.
படத்தில்  கானா பாலாவின் பாடலும் உண்டு 
இப்படத்தின் ஹீரோ ரிச்சர்ட் மண் ஆராய்ச்சி செய்கின்ற மாணவர்.  மண் வளத்தை மேம்படுத்துவதற்காக இவர் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றை, இவரிடம் இருந்து வில்லன் கண்ணதாசன் கைப்பற்ற நிணைக்கிறார்.
இதனால் ஏற்படும் விளைவுகளும், அந்த கருவியை ரிச்சர்ட் வில்லனிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா என்பதும் தான் கதை.
maan 3 
பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வரும் இப் படத்தில் இடம்பெறும் ”கோகோ கோகோ கோலா… நான் வந்திருக்கேன் கூலா…” என்ற பாடல் முழுக்க முழுக்க கப்பலில் படமாக்கப்பட்டு வருகிறது.
 நைட் எபெக்ட்டில் பல வண்ண விளக்குகளுடன், கப்பலில் கூடுதல் செட்களை அமைத்தது மட்டும் இன்றி, நடு நடுவே குதிரைகளையும் ஓட வைத்து பிரமிக்க வைத்துவிட்டார்களாம்.
ஹீரோயினை வில்லன் அந்தமானுக்கு கடத்திச் செல்லும்போது இடம்பெறும் இப் பாடல் நடுவே ஹீரோயின் வில்லனை சோப் போட்டு குளிக்கவைப்பது போல காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது.
maan 1
பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு தான் ஹீரோயின் சோப் போடுவார், ஆனால், இந்த படத்தில் உல்டாவாக ,
”ஹீரோவுக்குத் தரவேண்டிய காட்சியை வில்லனுக்குத் தந்துட்டாங்களே ..” என்று  ரிச்சர்ட் ஷாக் ஆகி விட்டாராம் . 
படத்தைத் தயாரிக்கும் ஏ.கண்ணதாசன், அந்தமானில் இதுவரை யாருடம் படப்பிடிப்பு நடத்தாத பல இடங்களில்  படப்பிடிப்பை நடத்தி வருகிறார். 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →