மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் ‘யார் இவன்’

yaar 8

ஏராளமான தெலுங்குப் படங்களை இயக்கியதோடு , உத்தம புத்திரன், படகோட்டி, களத்தூர் கண்ணம்மா போன்ற சரித்திரம் படைத்த தமிழ்ப் படங்களையும்  இயக்கியவர் டி. பிரகாஷ் ராவ் .

டி எல் வி பிரசாத்தும் தெலுங்கிலும் இந்தியிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் .

இப்போது வைக்கிங் மீடியா ஆண்டு  எண்டர்டெயின்மென்ட் சார்பில் ரைனா ஜோஷி என்பவர் தயாரிக்க, சச்சின், ஈஷா குப்தா, பிரபு , கிஷோர், தன்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில், 

yaar 1

டி. பிரகாஷ் ராவின் பேரனும் டி எல் வி பிரசாத்தின் மகனுமான டி.சத்யா என்பவர் எழுதி இயக்கும் படம் யார் இவன்.

வெண்ணிலா கபடிக் குழு உட்பட மூன்று படங்களை தெலுங்கில் ரீமேக் செய்த இந்த டி.சத்யா , தமிழ் தெலுங்கு இரு மொழிகளிலும் இயக்கும் படம் யார் இவன் ? தமிழில் இது இவருக்கு முதல் படம்.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் முன்னோட்டத்தை திரையிட்டனர் . கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ஒருவனை தனி அறையில் கை விலங்கு போட்டு வைத்து ,

yaar 6

காவல் துறை விசாரணை அதிகாரி கிஷோர் விசாரணை செய்வது போல அமைந்த முன்னோட்டத்தில் கொலை , ஆக்ஷன் , காதல் எல்லாம் வருகிறது

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டான்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ” படத்தின் நாயகன் சச்சின் ஜோஷி பெரிய பிசினஸ் மேன். எனினும் சினிமா அவரது ஆசை . மிக சிறப்பாக நடித்தார் . 

yaar 7

ஒளிப்பதிவாளர் அசத்தி இருக்கிறார் . இயக்குனர் மிக சிறப்பாக படமாக்கி உள்ளார் . ஆங்கிலப் படம் பார்க்கும் அனுபவம் தரும் ” என்றார் .

இசை அமைப்பாளர் தமன் பேசும்போது ” எனது அம்மாவும் இயக்குனரின் அம்மாவும் தோழிகள் . என்னை சத்யா சந்தித்தபோது நல்ல கதை திரைக்கதை கொண்டு வாருங்கள் .

yaar 5

கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்றேன் . அப்படியே கொண்டு வந்தார் . ஒளிப்பதிவு ஆபாரமாக உள்ளது . படம் நன்றாக வரும் ” என்றார் .

நடிகர் கிஷோர் தனது  பேச்சில் ” இது ஒரு நேர்மையாக உருவாக்கப்பட்ட கிரைம் திரில்லர் ஆக்ஷன்  படமாக இருக்கும் .

yaar 4

படம் சிறப்பாக உருவாகப்பட்டுள்ளது . எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர் ” என்றார் .

“தமிழில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது ” என்றார் நாயகன் சச்சின்

yaar 3

படம் பற்றிக் கூறும்  இயக்குனர் சத்யா ” இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் படம் .

கபடி விளையாட்டின் பின்னணியில் படத்தை உருவாக்கி இருக்கிறோம் .  ஹீரோ ஒரு கபடி வீரன் . கபடியை ரசிக்கும்  கோடீஸ்வரப் பெண் ஒருத்தி அவனை நேசித்து ,மணந்து  கொள்கிறார் .

ஒரு நிலையில் அந்தப் பெண் கொல்லப் படுகிறாள். கொலைப் பழி ஹீரோ மீது விழுகிறது .

ஹீரோயின் அப்பாவான கோடீஸ்வரர் குற்றவாளியை தண்டிப்பதில் தீவிரமாக இருக்கிறார் .  ஹீரோ என்ன செய்தான் என்பதுதான் கதை . ஹீரோயின் அப்பாவாக பிரபு சார் நடிக்கிறார்

yaar 2

மேலோட்டமாக பார்த்தால் இது வழக்கமான திரில் படம் போல இருக்கும் . ஆனால் அப்படி இல்லாமல் மனோவியல் முறையில் படத்தை கொண்டு போகிறோம் .

 இது ஒரு மைன்ட் கேம் படமாக அதாவது மூளை விளையாட்டுப் படமாக இருக்கும்  வித்தியாசமான காட்சிகள் . வித்தியாசமான சூழல்கள் ரசிகர்களைக் கவரும் .

படத்தின் எல்லாப் பாடல்களையும் மறைந்த நா . முத்துக் குமார் எழுதி இருக்கிறார் அவர் கடைசியாக பாடல் எழுதிய படம் இதுதான் என்று நினைக்கிறேன் .” என்றார்

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *