வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன் மற்றும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ – ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்க,
வெள்ளைப் பாண்டியனின் மகன் வெற்றி நாயகனாகவும், ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்தஅபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும் நடிக்க,
முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் நடிக்க,
இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘8 தோட்டாக்கள்’.
இந்த ‘திரைப்படத்தை, ‘சத்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில் சக்திவேல் தமிழகமெங்கும் ஏப்ரல் ஏழாம்தேதி வெளியிடுகிறார் .
படத்தின் இசை உரிமையை ‘யு 1 ரெகார்டஸ்’ நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கிய அடுத்த கணமே, இந்த படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது .
இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாடல்களையும் முன்னோட்டத்தையும் திரையிட்டார்கள் .பாடல்கள் மிக அழகாக எடுக்கப்பட்டு இருந்தன .
ஒரு குறிப்பிட்ட வயது வரை நேர்மையாக வாழ்ந்து வயதான மனிதர் ஒருவர் , நேர்மையாக வாழ்ந்ததால் எந்த பலனும் இல்லாத நிலையில் ,
தொலைந்து போன இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி ஒன்று அவர் கைக்கு வருகிறது . எட்டு இடங்களில் அவர் அந்த துப்பாக்கியை பயன்படுத்தி சுடுகிறார் .
அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதே இந்தப் படத்தின் கதையாக இருக்கலாம் என்பது படத்தின் முன்னோட்டத்தில் இருந்து புரிகிறது
இந்த படத்தின் தயாரிப்பு வேலைகளை மிக அழகாக கையாண்டு இருக்கும் ‘பிக் பிரிண்ட் பிச்சர்ஸ்’ ஐ பி கார்த்திகேயன் அவர்களுக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன்.
ஸ்ரீ கணேஷ் போன்ற ஒரு திறமையான படைப்பாளியை அறிமுகப்படுத்தி, தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்த்து இருக்கின்றது ‘வெற்றிவேல் சினிமாஸ்’ நிறுவனம்.
நிச்சயமாக தமிழ் திரையுலகை பெருமைப்படுத்த கூடிய திரைப்படமாக இந்த 8 தோட்டாக்கள் இருக்கும்”என்றார் .
படத்தை வாங்கி வெளியிடும் சக்தி வேலன் தனது பேச்சில்
” துருவங்கள் பதினாறு படத்தை நான்தான் ரிலீஸ் செய்தேன் .
அந்தப் படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இன்று தமிழ சினிமாவில் கடவுளின் குழ்நதை என்று கொண்டாடப்படுகிறார் .
காரணம் அந்தப் படத்தை அவர் எடுத்த விதம் . நான் இந்த படத்தையும் பார்த்து ரசித்துதான் வாங்கி வெளியிடுகிறேன் .
தோற்றத்தில் மட்டுமல்ல .. உருவத்திலும் கார்த்திக் நரேனை ஒத்திருக்கும் இந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திறமையிலும்
கார்த்திக் நரேனை ஞாபகப்படுத்துகிறார் . அவரைப் போலவே இவரும் இந்தப் படம் வந்த பிறகு கொண்டாடப்படுவார் ” என்றார் .
இயக்குனர் ஸ்ரீ கணேஷ் பேசும்போது
“ஒரு துப்பாக்கியில் இருந்து எட்டு குண்டுகள் வெடிக்கின்றன . அதனால் ஏற்படும் விளைவுகளே இந்தப் படம் .அன்பும் அறனும் தழைக்க வேண்டும் என்பதே இந்தப் படம் சொல்ல வரும் விஷயம் ” என்றார் .
படம் தழைக்கட்டும் !.