எ வெட்னஸ் டே, ஸ்பெஷல் 25, எஸ் எஸ் தோனி- தி அண்டோல்ட் ஸ்டோரி ஆகிய படங்களை இயக்கிய நீரஜ் பாண்டேவின் இயக்கத்தில்
அக்ஷய் குமார் , ரானா டகுபதி , மதுரிமா நடிக்க 2015 ஆம் ஆண்டு இந்தியில் வந்த படம் பேபி .
உளவாளி கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடித்த இந்தப் படத்தில் ஷபனா கான் என்ற ஒரு சின்ன கேரக்டரில் நடித்து இருந்தார் டாப்சி.
அந்த கேரக்டரை மட்டும் வைத்து ஒரு தனி கதை செய்து , டாப்சியே கதாநாயகியாக நடிக்க,உருவாகி இருக்கும் படம் நாமே ஷபனா , இப்படி ஒரு படத்தில் வந்த ஒரு கேரக்டரை அல்லது சில நிகழ்வுகளை,
விரித்துக் கதை செய்து வரும் படங்களை ஸ்பின் ஆஃப் படங்கள் என்பார்கள் (காப்பி அடிப்பது இந்த லிஸ்டில் வராதுங்கோவ் !)
படத்தில் பெண் உளவாளியாக நடிக்கிறார் டாப்சி . மனோஜ் பாஜ்பாய் , பிரித்விராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள் . படத்தில் அக்ஷய் குமார் ஒரு கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .
பேபியில் இருந்த அனுபம் கேரும் இந்தப் படத்தில் உண்டு . இந்தப் படத்தையும் கதை திரைக்கதை எழுதி தயாரித்து இருப்பவர் நீரஜ் பாண்டே. இயக்கம் சிவம் நாயர்
இந்தப் படத்துக்காக மார்ஷல் ஆர்ட்ஸ் உட்பட பல சண்டைக் கலைகளை கற்று படத்தில் தன் தெறமைய காட்டி இருக்கார் டாப்சீ .
சரி இதெல்லாம் இப்போ எதுக்கு என்கிறீர்களா ?
இந்தப் படம் நான்தான் ஷபனா என்ற பெயரில் தமிழில் மொழி மாற்றப் பட்டு வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளிவருகிறது தமிழ் வசனம் எஸ் பி சக்ரபாணி