‘றெக்க’ படத்தின் இயக்குநர் சிவா இசைத் தகட்டை வெளியிட்டார். இயக்குநர் பொன்ராம் டிரெய்லரை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் பிரேம்ஜி “நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான். யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும். ரீ ரெக்கார்டிங் செய்யும்போது அவரின் நகைச்சுவையைப் பார்த்துத் தனியாக சிரித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய அபிமான நடிகை யாஷிகா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இசையமைத்ததில் மகிழ்ச்சி. இறுதிக் காட்சியில் அமைந்த சண்டைக் காட்சிகள் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ஒவ்வொரு படத்திற்கும் எனக்கு பட்டப்பெயர் மாறிக்கொண்டேயிருக்கும். அதேபோல் தான் இந்த படத்திற்கு ‘இசை காட்டேரி’ என்று வைத்துக் கொண்டேன் என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசும்போது,. இப்படத்தை நானும் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் என்னால் இயலவில்லை. பேய் படத்திற்கு நகைச்சுவை நன்றாக இருந்தால் தான் படம் வெற்றியடையும். அந்த வகையில் இந்தப் படத்தில் பேய் படமாக இல்லாமல் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார்கள். ” என்றார்
படத்தின் இயக்குனர் புவன் நல்லான் பேசும்போது,”யோகிபாபு எனக்காக இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். ஒரு நல்ல கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி. ‘ஜாம்பி’ மாதிரியான படம் எடுக்கும்போது தொழில்நுட்ப கலைஞர்களின் உதவி பெரும்பங்கு வகிக்கும். அது இந்த படத்தில் எனக்கு நன்றாக அமைந்திருக்கிறது.” என்றார்