சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவும் தமன்னாவும் ஜோடியாக நடிக்க,
சுகுமார் என்பவர் இயக்கத்தில் தெலுங்கில் வந்து சக்கைப் போடு போட்ட படம் 100 % லவ் . 
சற்று சோம்பிக் கிடந்த நாக சைதன்யாவின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் இது .
இந்தப் படம் இப்போது மேற்படி சுகுமாரே தயாரிக்க,
அவரது நண்பரான சந்திர மவுலி இயக்க ,
ஜி வி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்க , 100 % காதல் என்ற பெயரில்,
தமிழில் மறு ஆக்கம் செய்யப்படுகிறது . இசையும் ஜி வி பிரகாஷே
படத்தில் நாயகியாக நடிப்பவர் ஷாலினி பாண்டே .
தெலுங்கில் சக்கைப் போடு போடும் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி .
இந்தப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் .

நந்தவன தேரு , ஜில்லா படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கணேஷ் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார் .

நடிகை ஜெய சித்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .
படத்தின் பூஜையில் பாரதிராஜா கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வாழ்த்தினார் .
ஆர்கே செல்வமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்
100 % லவ் தெலுங்குப் படத்துக்கு இசை அமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் ,
இந்த 100 % காதல் படத்தின் பூஜைக்கு வந்து வாழ்த்தியதோடு,
”என்னை விடவும் ஜி வி பிரகாஷ் போடப் போகிற சிறப்பான பாடல்களை கேட்க ஆவலாக உள்ளேன்” என்றார் .

“ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில்,
முக்கிய கேரக்டரில் நடிப்பது சந்தோஷமாக உள்ளது ” என்றார் ஜெயசித்ரா
“நண்பர் சந்திர மவுலி நல்ல டெக்னீசியன் .
என்னை விட படத்தை சிறப்பாக கொடுப்பார் . 
ஜி வி பிரகாஷ் ஹீரோவாக நடிப்பது ரொம்ப சந்தோசம் ” ” என்றார் சுகுமார் .
“ஷாலினி பாண்டே அர்ஜுன் ரெட்டியில் சிறப்பாக நடித்து இருந்தார் .
நல்ல திறமைசாலி நடிகை .
இந்தப் படம் தமிழில் அவருக்கு பெரிய அறிமுகமாக அமையும் ” என்றார் ஜி வி பிரகாஷ் .