சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்பிரமணியம் தயாரிக்க, ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், வினோதினி, ஜெயபிரகாஷ் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியிருக்கும் படம்.
சிறுவயது முதலே நண்பர்களாகப் பழகும் ஓர் இளைஞன் (ஜகவீர்) மற்றும் ஓர் இளம்பெண் (மீனாட்சி கோவிந்தராஜன்) . இளைஞனுக்கு ஒரு காதல் தேடி வந்தபோது அதை நண்பியே ஓகே செய்ய காதலியை விட நண்பியே முக்கியம் என்று அவன் நினைக்க அதை காதலியே ஏற்றும் எதிர்பாராத விபத்தில் காதலி இறக்கிறாள் .
அவள் மரணத்திற்குத் தானும் ஒரு காரணம் என்று நண்பி நினைக்க, அவனுக்கும் நண்பிக்கும் திருமணம் செய்து வைக்க , பெற்றோர் நினைக்க, எங்களுக்குள் நட்பு மட்டுமே என்று அவர்கள் மறுக்க,
அண்ணன் தங்கை உள்ள வீட்டில் அண்ணனுக்கு நண்பியையும் தங்கைக்கு நண்பனையும் திருமணம் செய்து வைக்க திட்டமிட, அப்படி ஒரு கல்லூரி நண்பன் கிடைக்க,, ஆனால் அவன் தங்கை ஒரு தப்பானவனை காதலித்து உண்மை தெரிந்து விலகி இருக்க, அந்தக் காதலன் பிரச்னை செய்ய, என்ன ஆச்சு என்பதே படம்.
இமான் இசையில் பாடல்கள் அருமை .
மற்றபடி என்ன சொல்ல?
ஆங்..
உங்கள் வயதில் ஒரு முப்பது குறைய வேண்டுமா?
‘ என்னது வயது குறைவதா? எடையைக் குறைக்க முடிவதே கஷ்டமாக இருக்கிறது . ஆனால் முயன்றால் முடியும். வயதை எப்படிக் குறைக்க முடியும் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது .
முடியும் . அதற்கான வழி ஒன்று இருக்கிறது. இதற்காக நீங்கள் எனக்கு சர்வீஸ் சார்ஜோ ராயல் டீ யோ .. அட ஒரு சிங்கிள் டீயோ கூட தர வேண்டாம்.
2K லவ் ஸ்டோரி பார்த்தால் போதும் உங்கள் வயதில் முப்பது குறைந்து விடும் .
எப்படி என்று தானே கேட்கிறீர்கள்?
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவில் ஒரு கதை எப்படி திரைக்கதையாக சொல்லப் பட்டது .. வசனம் எப்படி இருந்தது? கிளைமாக்ஸ் எப்படி இருந்தது ? காமெடி என்று ஒரு வஸ்து எப்படி சொல்லப் பட்டது . அப்படி புது வசந்தம் காலத்துக்குப் போய் விட்டது இந்தப் படம் (புது வசந்தம் படத்தோடு ஒப்பிட்ட்டது யார் மனதையும் காயப்படுத்தினால் மன்னிக்க)
எனவே இந்தப் படங்களைப் பார்க்கப போனால் நீங்கள் முப்பது வருடம் பின்னால் போய் விடுவீர்கள் .
முப்பது வருடம் பின்னால் போனால் உங்களுக்கு முப்பது வயது குறைந்து விடும் அல்லவா ? எனக்கு அப்படித்தான் குறைந்துள்ளது.
வேணுமானால் நீங்களும் முயற்சி செய்யலாம்
2K லவ் சொறி .
