தேடலின் வலியைச் சொல்லும் ’60 வயது மாநிறம்’.

ஒரு படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் அந்தப் படத்தின் வசனங்களை  மேற்கோள் காட்டிப் பேசி எத்தனை வருஷமாச்சு — அதுவும் படம் ரிலீசுக்கு முன் !

மீண்டும் அந்த அற்புதத்தைக் கொண்டு வந்தது  ’60 வயது மாநிறம்’.  படத்தின் இசை வெளியீட்டு விழா . பாராட்டியவர் பிரகாஷ் ராஜ். பாராட்டப் பட்டவர் வசனகர்த்தா விஜி . 

ஆம்! 

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, 

விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ் ,சமுத்திரக்கனி,   இந்துஜா, குமாரவேல்,  சரத், மதுமிதா, மோகன்ராம் ,  அருள் ஜோதி, பரத் ரெட்டி நடிப்பில், மொழி , பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய  ராதா மோகன் எழுதி இயக்கி இருக்கும் படம் ’60 வயது மாநிறம்’. 
 
படத்துக்கு இசை இளையராஜா . 
 

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார். பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர்.

அல்சீமர் மறதி நோயால் பாதிக்கப்பட்ட  அறுபது வயதான மாநிற மனிதரை தேடுவதே படத்தின் கதையாம் . கன்னடத்தில் வந்த ‘kothi bannaa sadhaarana maaykattu என்ற படத்தின் ரீமேக்காம் இந்தப் படம்  

  வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக இருக்கிற இந்தப் படத்தின்  படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய கலைப்புலி எஸ் தாணு ,

“தமிழ்நாட்டை சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பெண் இந்துஜா . வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர் எனது இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பது சந்தோசம் ” என்றார் . 

இந்துஜா தனது பேச்சில் , “விக்ரம் பிரபு மிகச் சிறப்பாக நடிக்கிறார் . ஆனாலும் அவருக்கு ஏன் இன்னும் சரியான இடம் கிடைக்கவில்லை என்று யோசிப்பேன். இந்தப் படத்தில் மிக சிறப்பாக நடித்துள்ளார் . இந்தப் படம் அவருக்கு ஒரு உயர்ந்த இடத்தைக் கொடுக்கும் ” என்றார் . 

விக்ரம் பிரபு பேசும்போது , ”  இந்தப் படத்துக்கு வேறொரு பெயர் வைக்க வேண்டும் என்றால் my sweet father என்று வைக்கலாம் .

அந்த அளவுக்கு இந்தப் படத்தில் நடிக்கும்போது அது என் நிஜ வாழ்வையும்  உணர்வு ரீதியாக தொட்டது.

ஏன் என்றால் என் அப்பா  அப்படி ஒரு சிறந்த அப்பா . . . அவருக்கு பிள்ளையாகப் பிறக்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும் . நல்ல வார்த்தைகள் கூறிய இந்துஜாவுக்கு நன்றி . 

யாருக்காவது எதற்காவது உதவ வேண்டும் என்றால் நீங்கள் உதவி செய்யுங்கள் . அதை விட்டு, 

அவர் ஏன் உதவவில்லை . இவர் ஏன் உதவவில்லை என்று கேட்காதீர்கள் ” என்றார் . 

ராதாமோகன் தன் பேச்சில் , ” மிகச் சிறந்த மாபெரும் தயாரிப்பாளரான தாணு தயாரிக்கும் படத்தை இயக்குவதில் பெருமை அடைகிறேன் ;

அதே போல இளையராஜா இசையில் படம் இயக்குவது மாபெரும் பெருமை . ஒரு உதவி இயக்குனராக, 

அவரது படங்களில் பணியாற்றி உள்ளேன் . அனால் இயக்குனர் ஆன பிறகு இப்போதுதான் அமைந்தது . அதுவும் காலை எட்டரை மணிக்கு கம்போசிங் வரச் சொன்னார் . ரொம்ப சந்தோஷமாக இருந்தது .

ஏனென்றால் இப்போது பல இசை அமைப்பாளர்கள் இரவு இரண்டு மணிக்கு மேல்தான் கம்போசிங்கில் உட்காருகிறார்கள் . ஏதோ மாந்திரீகம் செய்வது போல ” என்றார் 

பிரகாஷ் ராஜ் பேசும்போது , ” ஒரு தேடல் பற்றிய ஒரு படம் இது. இந்த படத்தின் டிரைலரிலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள், அது ஒரு தேடல் என்பதை.

காணாமல் போனதை தேடுகிறோமா, தொலைத்ததை தேடுகிறோமா என்பது பற்றியதுஅந்தத் தேடல் . இந்த கதையை கேட்டு படத்தின் உரிமையை வாங்கிவிட்டேன்.

சீரியசான  ஒரு விஷயத்தை காமெடி கலந்து கொடுப்பதற்கு  ராதாமோகன் – விஜியால் மட்டுமே முடியும். முதலில் இந்த படத்தை நான் தான் தயாரிக்க வேண்டும் என்றிருந்தேன். அரசியல் ரீதியாக நிறைய வேலைகள் இருந்தது.

இந்த படத்தை தாணு சார் தயாரிக்க முன்வந்தார். அவருக்கு நன்றி. இந்த படத்தை அவர் தயாரித்ததால் படத்திற்கு ஒரு பெரிய பலம் வந்திருக்கிறது.

படத்துக்கு விக்ரம் பிரபுவை ஹீரோவாக கொடுத்தது தாணு சார்தான். விக்ரம் பிரபு அந்த கதாபாத்திரத்திற்கு, 

நல்ல தீனியாக நடித்திருக்கிறார். ஒரு நடிகராக என்னை ரசிக்க வைத்துவிட்டார். அவரிடம் ஒரு பக்குவம் இருக்கிறது  இந்த படத்தில் சமுத்திரக்கனி மிக முக்கியமான, வலுவான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இது ஒரு சிறிய படம் என்பதால் அவரிடம் நானே நேரில் சென்று கேட்டேன். பதில் ஏதும் சொல்லாமல் படத்தில் நடிப்பதாக அன்புடன் ஒப்புக் கொண்டார்.

அவரது கதாபாத்திரம் ரொம்ப முக்கியமானது, அழகாக வந்திருக்கிறது.

படத்தை தன் அற்புதமான வசனத்தால் தூக்கி நிறுத்தி விட்டார் விஜி . 

ஓரிடத்தில் ஒரு கேள்வி வரும் . நாம் ‘தேடுவது காணாமல் போனதையா இல்லை தொலைத்ததையா ? ‘என்று . மிக ஆழமான வசனம் . இன்னொரு இடத்தில் ‘காணமல் போன இவர் கடன் வாங்கி இருந்தால் எல்லோரும் இவரைத் தேடி இருப்பார்கள் .

கடன் கொடுத்து இருந்தால் யாரும் தேட மாட்டார்கள்’ என்று ஒரு வசனம் . இப்படி வாழ்க்கையை வசனங்களில் கொட்டி இருக்கிறார் விஜி 

 குடும்பத்தோடு உட்கார்ந்து ரசிக்கக் கூடிய படம் தரும் ராதா மோகன் ஒரு பலம் என்றால் இசை ஞானி இளையராஜா ‘மெகா’ பலம்.

அப்பா – பிள்ளை  இடையிலான ஒரு உறவை நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லி இருக்கும்  உன்னத படைப்பாக வந்திருக்கிறது ‘60 வயது மாநிறம் ” என்றார் .

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *