ஒய் ஜி மகேந்திரா, சுகாசினி, சத்யராஜ், சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் அய்யப்பா நடிப்பில் வெங்கட்டின் கதைக்கு பா விஜய் வசனம் மற்றும் பாடல்கள் எழுத சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி இருக்கும் படம்.
சாருகேசி என்பது ஒரு ராகத்தின் பெயரும் கூட
ஒய் ஜி மகேந்திராவின் இயக்கத்தில் மேடை ஏற்றப்பட்ட நாடகம் சினிமாவாக ஆகி இருக்கிறது.
பிரபல கர்நாடக சங்கீத வாய்ப்பாட்டுக் கலைஞர் சாருகேசி ( ஒய் ஜி மகேந்திரா) . மனைவி பாக்கியலட்சுமி ( சுஹாசினி ) ஐம்பதாண்டு கால விசுவாச வேலைக்காரர் செந்தில் ( தலைவாசல் விஜய்).
சாருகேசிக்கு ஒரு . ‘ மகன்’ (ராஜ் அய்யப்பா) .
அவனுக்கு அப்பா என்றாலே பிடிக்காது . எங்கே போனாலும் சாருகேசியின் மகன் என்றே பார்க்கப்படுவதால் வந்த எரிச்சல் அது. அப்பாவுக்கு அவமானம் ஏற்படும்படி நடந்து கொள்வதே அவன் வேலை. ராகதேவன் ( சத்யராஜ்) என்ற ஆன்மீக குருவே சாருகேசிக்கு ஆறுதல்
மகன் ஒரு பெண்ணை (ரம்யா பாண்டியன்) காதலிக்க . அவளுக்கும் சாருகேசி மீது ஒரு பழைய பகை. வீட்டுக்குள் மருமகளாக வந்து அவளும் சாருகேசியையம் அவரது மனைவியையும் அவமானப்படுத்த, சாருகேசிக்கு அல்சைமர் என்ற மறதி நோய் வந்து விடுகிறது.
‘சாருகேசி வெறுக்கப்பட வேண்டியவர் அல்ல ; தாம் செய்வதே தவறு’ என்று ‘மகனு’ம் மருமகளும் புரிந்து கொள்ளும் போது சாருகேசிக்கு அவர்கள் யார் என்றே தெரியவில்லை . தன்னையும் யார் என்றே தெரியவில்லை. நடந்தது என்ன என்பதே சாருகேசி
ஒய் ஜி மகேந்திராவின் இயக்கத்தில் மேடை ஏற்றப்பட்ட நாடகம் சினிமாவாக ஆகி இருக்கிறது. சுஹாசினி, , சத்யராஜ், தலைவாசல் விஜய் , கவுரவத் தோற்றத்தில் சமுத்திரக்கனி , இயக்குனராக சுரேஷ் கிருஷ்ணா எல்லோரும் உள்ளே வந்திருக்கிறார்கள்.
ஒய் ஜி மகேந்திரன் தனது வழக்கமான பாணியில் நddடிக்கிறார் . சுஹாசினி மட்டும் என்னவாம்.
சத்யராஜ், சமுத்திரக்கனி இயல்பு. ஒரு நீளமான ஷாட்டில் வெகு இயல்பாக அழகாக பேசி உள்ளார் சமுத்திரக்கனி.
ராஜ் அய்யப்பா கடித்து கடித்துப் பேசுகிறார்.
பா விஜய்யின் வசனங்கள் செயற்கை.
தேவாவின் இசை இனிமை . ஆனாலும் இளையராஜா இருந்திருந்தால் அந்த உயரமே வேறு.
சஞ்சய்யின் ஒளிப்பதிவும் சிறப்பு.
பாடல் வரிகள் அருமை ” பிருந்தாவனமே போதும் என்றால் ராதை நானும் என் செய்வேன்?” – அபாரம் .லவ்லி.
மகன் பற்றிய ரகசியத்தில் முதல் மரியாதை எல்லாம் வந்து போகிறது. நல்லவேளை சாருகேசி செருப்புப் போட்டு நடக்கிறார்.
திரையிலும் நாடகமே நடக்கிறது. அதுவும் ரொம்பப் பழைய பாணி நாடகம்
