சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ள இப்படத்தை ஜான்சன் கே எழுதி இயக்கயிருக்கிறார். 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார்.
படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக் குழு!
விழாவில் எஸ்.பி சவுத்ரி பேசும்போது,”படத்தை சந்தானம் சார் போட்டுக்காட்டினார். படம் செம்மயாக வந்திருக்கிறது. என்னை நம்பி படத்தை தந்த சந்தானம் சாருக்கு நன்றி” என்றார்
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,”. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதைச் சந்தானம் சார் சரியாகச் செய்து வருகிறார்.

படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக படம் இருக்கும்” என்றார்
இயக்குநர் ஜான்சன் பேசும்போது,”சந்தானம் சார் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. . ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார்.
அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். கேமராமேன் கோபி உள்பட எல்லோரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கோபியிடம் ஒரு சீனைக் கொடுத்தால் அசத்தலாக எடுத்துக் கொடுத்து விடுவார். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள்.
சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன்” என்றார்.
நடிகர் சந்தானம் பேசும்போது, ” 2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப் பிடிச்சுப் போறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார்.

ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயர்பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப்படத்தின் கலரே மாறிவிட்டது.
சந்தோஷ் சாரிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு சார் கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார்.
லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் இனிமே இப்படித்தான் படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு.
ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார். இந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்க வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம் இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன்.
ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார்.
என்னுடைய வேண்டுகோள் என்னன்னா படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்