யோகிபாபு நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய கூர்க்கா படத்தின் வெற்றி விழா !
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் படத் தொகுப்பாளருமான ரூபன் பேசும்போது,

” பொழுது போக்கு அம்சம் ஒன்றை மட்டுமே மனதில் வைத்து இந்தப் படத்தை உருவாக்கினோம் . படம் நிஜமான வெற்றியை பெற்று இருப்பது மிக்க சந்தோசம்” என்றார் .
நடிகர் ராஜ் பரத்

” இப்படி ஒரு வெற்றிப் படத்தில் எல்லோரும் பாராட்டும்படி நடித்து பேர் வாங்கியது நம்பிக்கையை தருகிறது ” என்றார் .
ரவி மரியா , ” சின்ன கதாபாத்திரம் என்று சொல்லித்தான் அழைத்தார் இயக்குனர் .
ஆனால் ஸ்பாட்டில் பேசிப் பேசி பெரிதானது ” என்றார்.
மயில்சாமி , ” இயக்குனர் எங்களை இயல்பாக நடிக்க அனுமதித்தது பெரும் பலமாக இருந்தது ” என்றார்
மனோபாலா ” இயக்குனருக்கு என்ன எடுக்க வேண்டும் என்பதில் இருந்த தெளிவே படத்தின் வெற்றிக்கு காரணம் ” என்றார்
படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் இயக்குனருமான சாம் ஆண்டன் , ” படம் வெளியான இரண்டு நாட்கள் கழித்து படத்தை வாங்கி வெளியிட்ட லிப்ரா ரவீந்தர் சந்திர சேகருக்கு போன் செய்து ‘ சார் நிஜமாவே படம் வெற்றியா ? உங்களுக்கு ல்லாபம் வந்ததா ? ‘ என்று கேட்டேன் .
அவர் விளக்கமாக சொன்ன பிறகே சந்தோஷப் பட்டேன் . ரவீந்தர் சந்திர சேகர் செய்த பிரம்மாதமான விளம்பரங்களும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணம் ” என்றார் .

ரவீந்தர் சந்திர சேகர் பேசும்போது , ” இதுவரை நான் தயாரித்து வெளியிட்ட மூன்று படங்களும் எனக்கு நஷ்டம்தான் . அதன் மூலம் பல கோடிகளை இழந்தேன் . கூர்க்கா படத்தை வாங்கி வெளியிட்டேன் . முதன் முதலாக லாபம் பார்த்தேன் .
இனி நான் தயாரிக்கும் படங்களை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்பது எனக்கு தெரியும்.
நல்ல படங்களை யார் கொண்டு வந்தாலும் நியாயமான விலைக்கு வாங்கி நியாயமாக தொகைக்கு வெளியிட்டு உதவ காத்திருக்கிறேன் . ஏனென்றால் நான் சினிமாவை காதலிக்கிறேன்.

சினிமாவில் எனக்கு முதன் முதலில் லாபம் கொடுத்த இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் படம் தயாரிப்பேன் ” என்றார்