இயக்குநர் மித்ரன் பேசும்போது, ” நம் சமுதாயத்தில் நம் வீட்டுப் பெண்ணை மட்டும்தான் தெய்வமாக மதிப்பார்கள். அடுத்த வீட்டைப் பெண்களை வெறும் உடலாகத்தான் பார்க்கிறோம். ஒவ்வொரு பெண்ணும் வெளியே வந்து மிண்டும் வீட்டுக்குத் திரும்பும் வரை ஒரு பாதுகாப்பற்ற மனநிலையோடும், மனஅழுத்தத்தோடும் தான் இருக்கிறார்கள். ஆடையில்லாமல் ஒரு காட்சியில் கூட ஆபாசமாக இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.” என்றார்.
இயக்குநர் ரவிக்குமார் பேசும்போது, ” சுதந்திரம் பெண்களுடைய ஆடையினால் தான் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறார்கள். இன்னமும் துப்பட்டா அணிவதை வலியுறுத்தி வருகிறார்கள். ஆண்களுக்கு ஆடை கட்டுப்பாடு கிடையாது. பெண்களின் பாதுகாப்பற்ற நிலைக்கு அவர்களின் ஆடைகள் தான் காரணம் என்று இன்று இருக்கும் சமுதாயத்தின் கருத்தை மாற்றியமைக்கும் வகையில் இப்படம் இருக்கும்” என்றார்.
இயக்குநர் லோகேஷ் பேசும்போது, “ரத்னம் மிக வலிமையான எழுத்தாளர். அதை இப்படம் மூலம் ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். ஆடை கருத்தாழமிக்க படமாக மட்டுமில்லாமல் அனைவரும் ரசிக்கும்படியான சினிமாவாகவும் இருக்கும் என்றார். அதற்காக அவர்களின் கடின உழைப்பு தெரிகிறது” என்றார்.
இயக்குநர் ஸ்ரீகணேஷ் பேசும்போது, “{மேயாத மான் படத்தின் கதைக்கும், ஆடை படத்தின் கதைக்கும் நிறைய வித்தியாசம் தெரிகிறது. இப்படத்தின் பெயரும், முதல் பார்வை போஸ்டரும் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதுபோலவே படமும் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.
இயக்குநர் நித்திலன் பேசும்போது, ‘மேயாத மான்‘ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முதல் படம் முடித்துவிட்டு அடுத்த படத்தின் அதன் சாயல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணம் ஒரு இயக்குநருக்கு இருக்கும். அந்த சாயல் இல்லாமல் முற்றிலும் வித்தியாசமாக இயக்கியிருக்கிறார் ரத்னகுமார். இப்படத்தைப் பார்த்த பிறகு பெண்களைப் பற்றியும் அவர்களின் ஆடை பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் அனைவருக்கும் தெளிவான புரிதல் வரும்” என்றார்.
ஆடை வடிவமைப்பாளர் கவிதா, ” டீஸர் பார்த்து பலரும் கேட்டார்கள் இந்த படத்திற்கு எதற்கு ஆடை வடிவமைப்பாளர் என்று. ஆடை என்பது எந்தளவு முக்கியமென்று இல்லாதபோது தான் தெரியும். அதை இயக்குநர் மிக அழகாக கூறியிருக்கிறார்” என்றார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதும் இது ஆபாச படமாக இருக்குமோ? என்று எழுதினார்கள். ஆனால் இப்படம் வெளியானதும் அனைவரின் பார்வையும் மாறும் என்று நம்புகிறேன்” என்றார்.
பார்த்திபன் பேசும்போது, “ஆண்களைவிட பெண்கள் எப்போதும் வலிமையானவர்கள், தைரியமானவர்கள். பெண்களை மையப்படுத்தி ஒரு படம் வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு நல்ல படம் எடுப்பதற்கு 30 வருட காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.
நடிகை அமலா பால் பேசும்போது, “படத்தின் கதையைப் படித்ததும் உற்சாகமாக ஒப்புக் கொண்டேன். இருப்பினும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது ஒரு சிறு தயக்கம் இருந்தது. உடனே இயக்குநரிடம் நாம் அனைவரும் ஒரு குழுவாக பணியாற்றினால் தான் இப்படம் சிறந்த படமாக வரும் என்று கூறினேன். அதை அவர் ஏற்றுக் கொண்டதால் அனைவரும் ஒன்றாக பணியாற்றினோம்.” என்றார்.
‘ஆடை’ படத்தின் இசைத் தகடு வெளியிடப்பட்டது.
