ஆரகன் @ விமர்சனம்

ட்ரென்டிங் ஆர்ட்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் ஹரிஹரன் பஞ்சலிங்கம்  தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, கவிபிரியா மனோகரன், ஸ்ரீ ரஞ்சனி, கலைராணி, யாசர் நடிப்பில் அருண் கே ஆர் இயக்கி இருக்கும் படம். 

முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவர்,  ஒரு நபருக்கு ஒரு முக்கியமான  மந்திர மருந்தைக் கொடுக்கிறார். அது என்றும் இளமையாக வைத்துக் கொள்ளும் மருந்து .  ஆனால் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த மருந்தைப் புதுப்பித்து அருந்த வேண்டும். அதற்கான வழிமுறைகள் நியாயமானவை அல்ல. 

இப்போதைய நிகழ்வில் , 

அனாதை இல்லத்தில் வளர்ந்த ஓர் அழகான நல்ல தங்கமான இளம் பெண்ணுக்கும் ( கவிபிரியா மனோகரன்) ஒரு இளைஞனுக்கும் (மைக்கேல் தங்கதுரை) காதல் . 

தொழில் செய்து முன்னேற நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவர்கள் லட்சியம். அவனால் பணம் புரட்ட முடியாமல் இருக்க,  

அதிக சம்பளம் என்பதால்…

நகரில் இருந்து வெகு தூரத்தில் ஒரு மலைக் காட்டுக்குள்,  ஒழுங்கான செல்போன் சிக்னல் வசதி மற்றும் சக மனிதர்கள் இல்லாத அடர்ந்த பகுதியில் தனிமையாக உள்ள வீட்டில் வசிக்கும் ஒரு வயதான பெண்மணியைப் பராமரிக்கும் வேலைக்குப் போகிறாள் காதலி 

அங்கே நடக்கும் அமானுஷ்ய,  அப்நார்மல்,  மனோவியல் நிகழ்வுகள் .. அவளுக்கு விரிக்கப்ட்ட வலை… அது அவளை என்ன செய்தது ? அவளது காதல் என்ன ஆனது ?  என்பதே படம் 

இயல்பான காதல் கதையாக ஆரம்பிக்கும் படம் .. 

நாயகன் நாயகியின் மனோவியல் பற்றிய உரையாடல்கள் சிறப்பு. 

நாயகி காட்டு பங்களாவுக்குள் போனதும் படத்தின் நிறம் திடம் சுவை எல்லாம் மாறுகிறது . சில இடங்களில் நிஜமாகவே அதிர அடிக்கிறார்கள் 

அந்த இடைவேளை டுவிஸ்ட் சற்றும் எதிர்பாராத ஒன்று . கிரேட் . 

ஆனால் அதன் பிறகு என்ன செய்வது என்பதில்தான் குழப்பம் . 

படத்தின் முதல் பலம் பெரும்பலம் நாயகி கவிபிரியா மனோகரன்.  தோற்றம் , நடையுடை பாவனை, வெள்ளந்திக் குண்டு முகம், அந்த  முகம் கொள்ளாப் புன்னகை என்று இதயத்தை கொள்ளை அடிக்கும் அழகுச் செல்லக்குட்டி .  நடிப்பிலும் அசத்தி இருக்கிறார் . தமிழ் சினிமாவுக்கு நல்ல வரவு . 

மைக்கேல் தங்கதுரை கச்சிதமாக நடித்துள்ளார் 

கலைராணி, ஸ்ரீ ரஞ்சனி இருவரும் மிக சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். ஸ்ரீரஞ்சனிக்கு இது வித்தியாசமான கேரக்டர் 

முனிவர் சித்தர் என்று சொல்லிவிட்டு படத்தில் காட்டப்படும் விஷயங்கள் சித்தர்கள் பற்றிய புரிதலின்மையையும் தவறான பார்வையையும் காட்டுகிறது . 

அடிப்படையில் நல்ல கதைதான். ஆனால் இடைவேளைக்குப் பிறகு திரைக்கதையை கையாண்ட விதமும் தாழ்நிலை படமாக்கலும் ஆரகனை  … யாரகன் என்று கேட்க வைத்து விட்டது 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *