ஜனா ஜாய் மூவீஸ் சார்பில் வடலூர் ஜே சுதா ராஜலக்ஷ்மி, ஜேம்ஸ் யுவன் தயாரிப்பில் ஆர் எஸ் கார்த்திக், மனிஷா ஜித், எலிசபெத், சிவசங்கர், ஜேம்ஸ் யுவன் நடிப்பில் வந்திருக்கும் படம் (டைரக்டர் பேரே இல்லைங்கோ)
கிராமத்தில் மூத்ததாரத்து மகளாகப் பிறந்த பெண் வயதுக்கு வரும் பருவம் அடைந்தும் வயதுக்கு வராமல் இருக்க, உறவு முறை ஆட்கள் நிறைந்த இளையதாரத்துக்குப் பிறந்த பெண் வயசுக்கு வந்து விட,
மூத்த பெண்ணை சித்தி பாசமாகப் பார்த்துக் கொண்டாலும் மற்ற உறவு முறைகளின் நெருக்குதல் அவளை சித்திரவதைக்கு ஆளாக்க , கிராமத்த்துக் கூத்துக் கலைஞனுக்கும் அவளுக்கும் வரும் காதல் என்ன ஆனது என்பதே படம்.

கனவில் வந்த பட்டாளத்துக் காதலன், கூத்துக் கலைஞனாக நிஜத்தில் இருப்பது கலகல
கனவில் அவள் பூப்படையும் காட்சி நெகிழ்ச்சி
ஆரியமாலா கூத்துப் பாடல்களை அந்தப் பெண்ணின் வாழ்வியலோடு பொருத்திய விதம் அழகு.
ஆர் எஸ் கார்த்திக் நடிப்பில் கவர்கிறார்
செல்வநம்பி இசையில் பவதாரிணி பாடி இருக்கும் பாடல் இனிமை. பின்னணி இசையும் சிறப்பு
ஜெய் சங்கர் ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு கவனிக்க வைக்கிறது .
எனினும் தேவையற்ற , , பழமையான காட்சிகள், நாட்டார் தெய்வங்கள் பற்றிய புரிதலின்மை , படத்தை முடிப்பதில் உள்ள குழப்பம் இவற்றால் பின்னடைவு காண்கிறது ஆரியமாலா .