ஆட்டோ குரூப்ஸ் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் எஸ். சைலேஷ் சிவராஜா தயாரித்துள்ள படம் ‘இவன் ஏடாகூட மானவன்’.
இதில் அபிசரவணன் கதாநாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகனாக யோகி அறிமுகமாகிறார். காயத்திரி கதாநாயகியாகவும், அகல்யா இன்னொரு கதாநாயகியாகவும் அறிமுகமாகி உள்ளனர்.
தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா வில்லனாக நடிக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன், மயில்சாமி, மதன்பாபு, மதுரை முத்து, பாவா லட்சுமணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
“அரசியல் பின்புலமுள்ள அதிகார வர்க்கத்தினர் சமூகத்தில் கவுரவமாக இருப்பவர்களின் சொத்துக் களை மிகக்குறைந்த விலைக்கு மிரட்டி வாங்கி தன் வசப்படுத்தி கொள்கிறார்கள்.
யோகி சிறப்பாக நடித்துள்ளார். வில்லனாக நடித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.சைலேஷ் சிவராஜா நடிப்பு ரகுவரனைப் போன்றும், வசன உச்சரிப்பு சத்யராஜ் போன்றும் இயல்பாக உள்ளது” என்றார்.



