மைக்கேல் ஜாக்சனுக்கு அடுத்து ஏ. ஆர் ரஹ்மானுக்கு !

one
மைக்கேல் ஜாக்சனின் நடத்திய இசை நிகழ்ச்சி ஒன்று, “தி இஸ் இட்” என்ற பெயரில் இசைத் திரைப்படமாக வெளியானது. அதை போன்று இந்தியாவில் முதன்முறையாக, 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அமேரிக்காவில் மேற்கொண்ட இசை சுற்றுப்பயணம் உலகெங்கும் திரையரங்குகளில் இசைத் திரைப்படமாக வெளியாக உள்ளது

YM மூவிஸுடன் இணைந்து கிரேப் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ள “ஒன் ஹார்ட்” இசைத்திரைப்படம் பிப்ரவரி 5ம் நாள் கனடா, டோரண்டோவில் உள்ள ஸ்காட்டியா பேங்க் திரையரங்கில் பிரத்யேகமாக திரையிடப்பட்டது.
“ஒன் ஹார்ட்” இசை படத்தை பார்த்த ரசிகர்கள், படம்  ஒரு புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தியதாகவும், படத்தை மிகவும் ரசித்து பார்த்ததாகவும் கூறினர். 
“ஒன் ஹார்ட்” என பெயரிடப்பட்டுள்ள இந்த இசைத் திரைப்படத்தில் அமேரிக்காவில் 14 நகரங்களில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹமான் தலைமையிலான இசை சுற்றுபயணம்,
இசை நிகழ்ச்சி, இசை ஒத்திகை மற்றும் பிரத்யேக பேட்டிகள் ஆகியவை இடம்பெற்றன.  ஏ ஆர் ரஹ்மான் திரையுலகில் தனது 25ம் ஆண்டில் அடியேடுத்து வைப்பதின் நினைவாக, 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த இசைத் திரைப்படம்  ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வருகிறது
one 1
வெகுநாட்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு  இசைத்  துறையைச் சார்ந்தவர்களுக்கு உதவிட ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. 
“ஒன் ஹார்ட் முயுசிஷியன்ஸ் பவுண்டேஷன்” எனும் தன்னார்வ அமைப்பு,  இசைத்துறை சேர்ந்தவர்களுக்கு உதவி புரிய தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் “ஒன் ஹார்ட்” படம் முலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும்  
இசைத் துறையினருக்கு “ஒன் ஹார்ட் முயுசிக் பவுண்டேஷன்” நிறுவனத்தின் நலத்திட்ட உதவிகள் மூலம் அன்பளிப்பாக அளிக்கின்றார்.

ஜீமா (GIMA – GLOBAL INDIAN MUSIC ACADEMY AWARDS) நிறுவனம் ஒன் ஹார்ட் மியூசிஷியன்ஸ் பவுண்டேஷனை நிர்வாகித்து நலத்திட்ட உதவிகளை முன்னின்று செய்ய வுள்ளது.

உலகெங்கும் ஏப்ரல் மாதம் “ஒன் ஹார்ட்” இசைத்திரைப்படம் வெளியாகின்றது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *