ஒரு முகத் திரை @ விமர்சனம்

mugam 1
ஸ்ரீ சாய் விக்னேஷ் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ் எஸ் கே ரிசோர்சஸ் சார்பில் ஆர். செல்வம் மற்றும் எல்.டி.சிவகுமார் ஆகியோர் தயாரிக்க ,
ரகுமான் , ஆர் .சுரேஷ், அதிதி ஆச்சார்யா , தேவிகா, ஸ்ருதி , டெல்லி கணேஷ் ஆகியோர் நடிக்க,

ஆர் .செந்தில் நாடன் (எழுத்துப் பிழை அல்ல) எழுதி இயக்கி இருக்கும் படம் ஒரு முகத்திரை .

திரை விலக்கிப் பார்க்கலாமா ? பார்ப்போம் .

மனநல மருத்துவம் படிக்கும் மாணவிகள் கண்மணி (அதிதி) மற்றும் மது (ஸ்ருதி) இடையே , பிரபல மன நல மருத்துவர் சத்யமூர்த்தி ரத்னவேலை (ரகுமான்) ,

தங்கள் கல்லூரி விசிட்டிங் புரஃபசராக யார் அழைத்து வருவது என்பதில் போட்டி .

mugam 2

கண்மணி, முகம் தெரியாத தனது முக நூல் நண்பன் ரோஹித் உதவியை நாட , சத்ய மூர்த்தி கல்லூரிக்கு வருகிறார் . ரோஹித்துக்கும் கண்மணிக்கும் நட்பு  நெருக்கம் அடைகிறது .

இதற்கிடையே , காதலித்து நெருங்கிப் பழகி பின்னர் ஏமாற்றி விட்ட மாயா என்ற பெண்ணால் (தேவிகா)  ஏமாற்றப்பட்டு தற்கொலை முயற்சி வரை போகும் ,

அர்ஜுன் என்ற இளைஞனை ( ஆர் . சுரேஷ்) , சத்யமூர்த்தி காப்பாற்றுகிறார் . சிகிச்சை தொடர்கிறது .

மேற்படிப்புத் திட்டங்களோடு ரோஹித்தை நம்பி கண்மணி சென்னை வர, ரோஹித்தை பார்க்க முடியவில்லை . கண்மணிக்கு சத்ய மூர்த்தி அடைக்கலம் தருகிறார் .

mugam 6

அவளால் ஈர்க்கப்படுகிறார் . ரோஹித் செய்வதாக சொன்ன உதவிகளை எல்லாம் அவரே செய்கிறார் .

ஒரு நிலையில் ரோஹித் பற்றி அறியும் கண்மணி பலத்த அதிர்சிக்கு ஆளாகிறாள் . அதைத் தொடர்ந்து சத்ய மூர்த்திக்கும் கண்மணிக்கும் பிரச்னை வருகிறது .

ஒரு நிலையில் கண்மணி உயிருக்கே ஆபத்து வருகிறது . அந்த ஆபத்தில் அர்ஜுனும் பங்கு பெறுகிறான் . ரோஹித் யார்? கண்மணி தப்பித்தாளா? சத்யமூர்த்தி என்ன ஆனார் என்பதே இந்த ஒரு முகத்திரை

அதிகம், சொல்லப்படாத கதை . அதற்காக ஒரு சபாஷ் .

mugam 5

ஆரம்பத்தில் திரைக்கதை கொஞ்சம் டல் அடித்தாலும் போகப் போக சூடு பிடிக்கிறது . இரண்டாம் பகுதியில் இயக்கமும் சிறப்பாக இருக்கிறது .

இயக்குனர் செந்தில் நாடனின் சிறப்பான ஃபிரேம்களில்  சரவண பாண்டியனின் ஒளிப்பதிவும் அருமை  பிரேம் குமார் சிவபெருமானின் பின்னணி இசை படத்துக்கு டெம்போ ஏற்றுகிறது . குட்!

கிளைகளாக வந்து இணையும் திரைக்கதையை படமாக சிறப்பாகப் படைத்ததில் எஸ் பி அஹமதுவின் படத் தொகுப்பும் சபாஷ் போட வைக்கிறது .

ரகுமான் கேரக்டருக்கு ஏற்ப சிறப்பாக பரிமளிக்கிறார் .அதிதி அழகாக இருக்கிறார் . நன்றாக நடித்தும் இருக்கிறார் .

mugam 3

கேரக்டரின் பக்குவமற்ற தன்மையை உணர்ந்து சிறப்பாக நடிக்கிறார் சுரேஷ் . தேவிகாவும் அப்படியே . படத்தில் வரும் இளம்பெண்கள் எல்லாருமே அழகாக இருக்கிறார்கள் .

அர்ஜுன் அந்த அளவுக்கு பாதிக்கப்படும் அளவுக்கு மாயவுடனான அவனது காதல் அழுத்தமாக சொல்லப் படவில்லை என்பது ஒரு குறை .

இருபத்தைந்து லட்ச ரூபாய் பணத்தை கண்மணி வாங்கிக் கொள்வது, அவள் பக்கம் உள்ள நியாயத்தைக் கெடுப்பது இன்னொரு குறை .

அதை அவள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அது சொல்லப்பட்டிருக்க வேண்டும்

mugam 4

எனினும் இந்த வாரம் வந்துள்ள மற்ற படங்களுக்கு இந்தப் படம் எவ்வளவோ பரவாயில்லை .

ஒரு முகத்திரை .. பெரிதாக ஓட்டையோ  கிழிசலோ இல்லாத ஒகே திரை

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *