கமர்ஷியலாக வெற்றி பெற்றதோடு நல்ல பெயரையும் பெற்ற குற்றம் 23 படத்தின் நன்றி அறிவிப்பு விழா நடைபெற்றது .
டாக்டர் பட்டம் பெற இருந்த — நாயகன் அருண் விஜய்யின் தந்தை — நடிகர் விஜயகுமாருக்கு மாலை அணிவித்துப் பாராட்டினார்கள் .
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் ஆடை வடிவமைப்பாளரும் இயக்குனர் அறிவழகனின் மனைவியுமான ஹீரா அறிவழகன்
” ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறோம் என்று எல்லோரும் பாராட்டும்போது சந்தொஷமாக இருக்கிறது ” என்றார் .
“என்னுடைய பெயரை குறிப்பிட்டு ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது என்று எல்லோரும் பாராட்டும்போது மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் இருந்தது” என்றார் ஒளிப்பதிவாளர் பாஸ்கரன் .
“இயக்குனர் அறிவழகனுக்கு என்ன வேண்டும் என்பதில் நல்ல தெளிவு இருந்தது . அது சிறப்பாக செயல்பட உதவியது ” என்றார் படத்தொகுப்பாளர் புவன் சீனிவாசன்
“பல படங்களில் எனது பாடல்கள் வெற்றி பெற்று பலரும் என்னை பாராட்டி இருந்தாலும் எனது முதல் வெற்றிப் படம் இதுதான் . அதற்காக படக் குழுவுக்கு நன்றி ” என்றார் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்
“வெற்றிகரமாக ஓடுகிற படம் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல படத்தை கொடுத்ததே எனக்கு பெரிய மகிழ்ச்சி . பெண்கள் குடும்பம் குடும்பமாக,
தியேட்டருக்கு வருவதைப் பார்க்க மகிழ்வாக இருந்தது ” என்றார் தயாரிப்பளார் இந்தர் குமார் .
“ஒரு நல்ல படத்தை வாங்கி வெளியிடோம் என்ற திருப்தி இருக்கிறது எங்களிடம் படத்தை வாங்கிய விநியோகஸ்தர் ஒருவர்,
பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு இந்தப் படத்துலதான் லாபம் பார்த்தேன் என்று கூறியபோது சந்தோஷமாக இருந்தது .” என்றார்,
அறிவழகன் இயக்கத்தில் படம் தயாரிக்க, அறிவழகனுக்கு அட்வான்ஸ் கொடுத்து இருக்கும் அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடாச்சலம்
“இந்தப் படத்துக்குப் பிறகு நான் என் மகன் அருண் விஜய்க்கு ரசிகன் ஆகி விட்டேன் ” என்று கூறிய விஜயகுமார் ” படத்தின் இறுதியில்
தத்தெடுப்பு பற்றி சொல்லி படத்தை இயக்குனர் அறிவழகன் முடித்து இருப்பது பாராட்டுக்குரியது ” என்றார் .
நடிகர் அருண் விஜய் பேசும்போது ” அப்பா என்னை இந்த அளவுக்கு இதுவரை பாராட்டியதே இல்லை. . எவ்வளவோ சாதித்த அவர் எனக்கு ரசிகன் என்று சொல்வது பெருமையாக உள்ளது .
இதற்குக் காரணமாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் நடிக்க ஆவலாக உள்ளேன் ” என்றார் .
இயக்குனர் அறிவழகன் தனது பேச்சில் ” அருண் விஜய்யோடு படம் பண்ண நானும் ஆவலாக இருக்கிறேன் . இந்தப் படம் பார்த்த குழந்தை இல்லாத தம்பதி ஒன்று ,
செயற்கை முறைக் கருத்தரிப்புக்குப் பதில் ஏதாவது ஓர் அனாதை இல்லத்தில் உள்ள , அப்பா அம்மா இல்லாத குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளனர் .
இதைத்தான் இந்தப் படத்தின் உண்மையான மாபெரும் வெற்றியாக கருதுகிறேன் ” என்றார்.
உண்மை.