டேக் என்டர்டைன்மெண்ட் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்க ,
ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களை இயக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி இருக்கும் ‘அம்மணி’ திரைப்படம்
57 வயதான சாலம்மா’ மற்றும் 82 வயதான அம்மணி என்ற இரண்டு கதாபாத்திரங்களின் உறவை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ‘சாலம்மா’ கதாபாத்திரத்திலும் , விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் பாட்டியாக நடித்த சுப்பு லக்ஷ்மி அம்மணி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்
இவர்களோடு நித்தின் சத்யா, ரோபோ ஷங்கர், ஜார்ஜ் மரியான், ஸ்ரீ பாலாஜி, ரெஜின் ரோஸ், சி ரேணுகா மற்றும் எஸ் அன்னம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“அம்மணி’ திரைப்படம் பெண்கள் மட்டுமில்லாமல் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பொதுவான படமாக விளங்கும்.
பொதுவாக எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என்றுதான் அனைவரும் யோசிப்பார்கள்… ஆனால் தன்னுடைய சாவு எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி யோசிக்கும் ஒரு பெண்மணியை பற்றிய கதைதான் ‘அம்மணி’.
தனியார் தொலைக்காட்சியில் நான் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தெருவில் காகிதம் சேகரிக்கும் ஒரு மூதாட்டி பகிர்ந்து கொண்ட விசயங்களை வைத்து அமைந்த படம் இது .
அந்த சூழலில் அந்த வயதிலும் எதையும் எதிர்கொண்டு வாழும் தில்லான பெண்மணி அம்மணி . எதற்கெடுத்தாலும் வருத்தப்பட்டு கலங்கும் கதாபாத்திரம் நான் நடித்துள்ள சாலம்மா பாத்திரம் .
இந்த இரண்டு கேரக்டர்கள் மூலமாக பெண்களின் வாழ்க்கையை பார்க்கும் படம் இது .
இந்த கதையை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர் வென் கோவிந்த் அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
எங்களின் ‘அம்மணி’ படத்தை காலம் சென்ற உன்னதமான கவிஞர் நா முத்துக்குமார் அவர்களுக்கு நாங்கள் சமர்ப்பணம் செய்கிறோம்…’அம்மணி’ படத்திற்காக அவர் எழுதி தந்திருக்கும் பாடல்கள் ஒவ்வொன்றும் காவியம்…’
லைப்பே மச்சான் மச்சான்… ஒரு ப்ரீபெய்டு போனு…’ என்னும் பாடல் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை இன்றைய கால தத்துவத்தோடு ஒன்றிணைத்து மிக அழகாக சொல்லி இருக்கிறார் நா முத்துக்குமார்.
நிச்சயமாக எங்களின் ‘அம்மணி’ திரைப்படம் ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதியும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘அம்மணி’ படத்தின் இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.
“அம்மணி கதையை படிக்கும் போது நான் ஒரு நாவலை படிப்பது போல தான் உணர்ந்தேன்…. அந்த அளவிற்கு சுவாரஸ்யமாக இருந்தது…
வெண் கோவிந்தா
வெறும் ஒரு பொழுது போக்கு திரைப்படம் என்பதை தாண்டி பல சிறப்பம்சங்கள் படத்தில் இருக்கிறது.
105 நிமிடங்கள் ஓடக்கூடிய ‘அம்மணி’ திரைப்படத்தில் திறமையான தொழில் நுட்ப கலைஞர்களாகிய ஒளிப்பதிவாளர் கே ஆர் இம்ரான் அஹமட்,
இசையமைப்பாளர் கே, படத்தொகுப்பாளர் கே ஆர் ரெஜித், கலை இயக்குனர் ஏ எஸ் ராஜா, பாடலாசிரியர் (லேட்) நா முத்துக்குமார்
மற்றும் நடன இயக்குனர் எம் ஷெரிப் ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வெகுவாகப் பெற்றிருக்கும் ‘அம்மணி’
வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது ” என்று உற்சாகமாகக் கூறுகிறார் ‘டேக் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தின் உரிமையாளரும், ‘அம்மணி’ படத்தின் தயாரிப்பாளருமான வெண் கோவிந்தா.
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462