“சென்னை 28 – II’ படத்தின் ஆடியோ பார்ட்னராக செயல்படும் டூப்பாடூ இசைத்தளம் பற்றி விளக்கி , பாடல்களை அந்த தளத்தில் வெளியிடும் வகையில் நடந்த பத்தீர்க்கையாளர் சந்திப்பில்
யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை வெளியிட்டார்
நிகழ்ச்சியில் பேசிய ‘டூப்பாடூ இசைத்தளத்தின் நிறுவனர் கௌந்தேயா. ”எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.. சினிமாவில் எந்த துறை வலுவிழந்து இருக்கிறதோ,
அந்த துறையை பலப் படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்தேன்.
ஆடியோ மார்க்கெட் பலம் இழந்து போகும் நிலையில் அதை சரி செய்யவே இந்த டூப்பாடூ தளத்தை ஆரம்பித்தோம்.
இதில் வியாபார நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் தொகையை எல்லாருக்கும் பிரித்துக் கொடுக்கிறோம். தவிர பாடலை கேட்கும் ரசிகர்களுக்கும் வருமானம் உண்டு ” என்றார் .
டூப்பாடூ இசைத் தளத்தின் தலைவரான கவிஞர் மதன் கார்க்கி பேசும்போது ” டூப்பாடு இணைய தளத்தில் பாடல்களை பதியும் போது ,
தயாரிப்பாளர் இசை அமைப்பாளர் , கவிஞர் , பாடகர்கள் எல்லோருக்கும் அதில் வருமானம் வரும் .
இதுவரை ‘டூப்பாடூ இசைத்தளத்தின் மூலம் சுமார் அறுபது பேர் இசை அமைப்பாளராகி இருக்கிறார்கள் . நாற்பதுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் உருவாகி இருக்கின்றனர் ” என்றார் .
மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதனுக்கு அஞ்சலியாக ‘டூப்பாடூ இசைத்தளம் உருவாக்கி இருந்த ஒரு நெகிழ்வான பாடல் திரையிடப்பட்டது .
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு ” கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து இந்த இரண்டாம் பாகம் வருகிறது. என்ன ஒரு வித்தியாசம் என்றால் நடித்தவர்கள் எல்லாரும் இப்போ தோற்றம் மாறி விட்டார்கள் .
பல பேரால கிரிக்கெட் ஆடவே முடியல . ஆனா படத்தில எல்லாருக்கும் ஜோடி இருக்கு .
வழக்கம் போல இந்தப் படத்துலயும் ஹீரோ யுவன் ஷங்கர் ராஜாதான்.
தவிர அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் சிவா இந்தப் படத்தில் நடித்து இருக்கிறார் . நான் இயக்கும் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் அவர்தான். படத்துக்கு கதை வசனம் இயக்குனர் எம் ராஜேஷ் ” என்றார்.
சிவா பேசும்போது ” இந்த சந்திப்புக்கு எல்லா நடிகர்களும் வந்துள்ளனர் ஆனால் நடிகர் ஜெய் வரவில்லை . இது நல்லது இல்லை.
இதே சென்னை 28 படத்தின் முதல் பாகம் எடுக்கப்பட்டபோது எனக்கு இன்னும் இன்னும் சீன் வேணும் என்று கெஞ்சி கெஞ்சி நடித்தவர் ஜெய் . அவர் இப்படி செய்யலாமா ?
படத்தின் விளம்பர நிகழ்வுகளுக்கு வரும் பண்பு வேண்டும்.
படம் சம்மந்தப்பட்ட எந்த நிகழ்வுகளுக்கும் வருவதில்லை என்பதை அஜித் கொள்கையாக வைத்து இருக்கிறார். அது வேறு .
என்னைப் பார்க்க வேண்டுமானால் திரையில்தான் பார்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் வசூலுக்கு வழி வகுக்கிறார் .
ஆனால் ஆர் கூட நன்கு வளர்ந்து தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வந்த பிறகே அந்த முடிவுக்கு வந்தார் .
ஆனால் ஜெய் இன்னும் வளரவில்லை . ஜெய் ஒன்றும் அஜித் இல்லை ” என்று …
ராக்கு ராக்கம்மா போட்டுத் தாக்கம்மா கதைதான் !