அம்முச்சி 2 @விமர்சனம்

நக்கலைட்ஸ் தயாரிப்பில் கே ராஜேஸ்வர் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அம்முச்சி 2 . 

காதலியை அவளது கிராமத்துப் பெற்றோர் மேற்படிப்புப் படிக்க விடாமல் தடுக்க, அவளுக்கு உதவ அதே கிராமத்தில் உள்ள தனது தாய்மாமன் வீட்டுக்கு வருகிறான் காதலன் .
 
பிரச்னை என்ன வென்றால் காதலியின் தகப்பனுக்கும் காதலனின் தாய் மாமனுக்கும் பல ஆண்டு ஜென்மப் பகை . இதனால் காதல் மற்றும் கல்விப் பிரச்னை மேலும் சிக்கலாக, முரட்டு ரவுடிக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்கிறான் காதலியின் தகப்பன். 
 
காதலனுக்கும் ரவுடிக்கும் முட்டிக் கொள்ள ஊர்ப் பஞ்சாயத்துக் கூடி , வர விருக்கும் திருவிழாவையொட்டி தொடர்ந்து மேளம் அடிப்பது, உண்டி வில்லில் அதிக மாங்காய் அடிப்பது, மல்யுத்தம், சிலம்பம், ரேக்ளா ரேஸ் ஆகிய ஐந்து போட்டிகளை நடத்தி, இருவரில் யார் ஜெயிக்கிறாரோ அவர் விருப்பமே இறுதியாகும் என்று முடிவு செய்கிறது . 
என்ன நடக்கும் என்ற உலகறிந்த  கதையை காமெடி செண்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறார்கள் 
 
படத்தின் மிகப் பெரிய பலம் கொங்குத் தமிழ் , அந்த முகங்கள் , அவர்களின் வாழ்வியல், உறவுப் பிணைப்புகளை அச்சு அசலாகக் கொண்டு வந்திருப்பது . நாயகிக்கும் அவரது மகளுக்குமான சண்டையும் பாசமுமான காட்சிகள் அழகு. காமெடி நன்று நட்பு துரோக செண்டிமெண்ட் காட்சிகள் இதம் வசனம் ரகளை .  குறிப்பாக பேச வந்த விஷயத்தை விட்டு விட்டு அடுத்தடுத்த சப்ஜெக்ட்டுக்கு மாறி பாதிக்கப்பட்டவரை வெறுப்பேற்ற வைக்கும் காட்சிகள் . 
 
பலவீனம் மற்றது எல்லாம் . தோற்றால் தமது குடும்பத்துக்கு என்ன ஆகும் என்று தெரிந்தும் பாட்டி உள்ளடி வேலை செய்வதும் அப்புறம் கண்ணீர் விடுவதும் நாடகத்தனம் . 
 
இடைவேளைக்கு முன்பே வில்லனை ஹீரோ சீரியல் பல்ப் ஒயர் மூலமே கட்டி உருட்டிக் கொண்டு வந்து பஞ்சாயத்து முன்னால் போட்ட பிறகு நடப்பது எல்லாமே பம்மாத்து என்று ஆகி விட்டது . 
 
என்னதான் காமெடி பொழுது போக்கு சினிமா என்றாலும் லாஜிக் மாதிரியாகவாவது எதாச்சும் இருக்கணும் இல்லையா? அது கூட இல்லை அதுதான் எரிச்சல் என்றால் அந்த எரிச்சலுக்கு சந்தணம் பூசுகிறது கொங்கு முகங்களும் மொழியும் . 
 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *