passion ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் தயாரிக்க, விஜய் சேதுபதி, டாப்சி , ஜெகபதி பாபு,ராதிகா, ராஜேந்திரபிரசாத் மற்றும் பலர் நடிப்பில் இயக்குனர் ஆர். சுந்தர்ராஜனின் மகன் தீபக் இயக்கி இருக்கும் படம் அனபெல் சேதுபதி .
பேய் இருப்பதாகக் காரணம் சொல்லி ஒரு மாபெரும் அரண்மனையை விற்கவோ பயன்படுத்தவோ முடியாமல் தவிக்கிறார் ஒரு பெரியவர் .
அதைமுழுசாக நம்பாத அவரது பேரனான ஒரு போலீஸ் அதிகாரி பிக்பாக்கெட் குடும்பமான டாப்சீ, ராதிகா, ராஜேந்திர பிரசாத் ஆகியோரைத் தங்க வைத்து ஒரு முடிவுக்கு வர விரும்புகிறார் .
உள்ளே இருக்கும் சமையல்காரப் பேயான யோகிபாபு சமைத்த உணவை சாப்பிடும் நபர்கள் செத்துப் போவார்கள் . அப்படி இறந்த பல குடும்பங்கள் அங்கே பேயாக இருக்கிறது .
ஆனால் டாப்சி கதாப்பத்திரத்துக்கு மட்டும் அப்படி ஆகவில்லை . ஏன் எதற்கு எப்படி என்ன ஆச்சு என்பதே அனபெல் சேதுபதி.
பிளாஷ்பேக்கில் அனபெல் என்ற வெள்ளைக்காரப் பெண்ணுக்காக வீர சேதுபதி என்ற குறுநில மன்னன் கட்டிய அரண்மனை , அதை அபகரிக்கப் பார்க்கும் இன்னொரு குறுநில மன்னன் கதையும் உண்டு
அட்டகாசமான ராஜஸ்தான் லொக்கேஷன், பிரம்மாண்டமான அரண்மனை , சிறப்பான ஒளிப்பதிவு, கலை இயக்கம், காஸ்டியூம்ஸ் , அனுபவம் வாய்ந்த நடிகர் பட்டாளம் , ஆங்காங்கே நகைச்சுவை , பிளாஷ்பேக்கில் வீர சேதுபதியாக விஜய் சேதுபதி, அறிமுக இயக்குனர் தீபக்கின் தேர்ந்த இயக்கம் இவையே அனபெல் சேதுபதி .
தயாரிப்பாளர்கள் பணத்தை தண்ணீராக … அல்ல அல்ல .. காற்றாக செலவு செய்து இருக்கிறார்கள்