மண் ஆராய்ச்சி சம்மந்தமாக படித்துவரும் நாயகன் ( ரிச்சர்ட்), புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
நாயகி (மனேசித்ரா) பூமி வெப்பமாவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது.
இதற்கிடையில் விருது வழங்கும் விழா ஒன்றில் மனோ சித்ராவை சந்திக்கும் வில்லன் (கண்ணதாசன்), அவர் மீது ஆசைப்பட்டு, அவரை அடைவதற்கு முயற்சி செய்கிறார்.
மண் வளத்தை எளிய முறையில் கண்டறியும் எந்திரம் ஒன்றை ரிச்சர்ட் கண்டுபிடிக்கிறார். இதன் மூலம், எந்த மண்ணில் எப்படிப்பட்ட வீடு கட்டுவது, வீடு கட்ட தகுதியான மணலா? ஆகியவற்றை கண்டுபிடித்து விடலாம்.
இந்த நிலையில், வில்லனின் நிறுவனம் கட்டிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்து பலர் பலியாகிறார்கள். அந்த கட்டிடம் கட்டப்பட்ட மண்ணை தனது எந்திரம் மூலம் ஆய்வு செய்யும் நாயகன் ,
அது கட்டிடம் கட்ட தகுதியான இடம் இல்லை, என்பதை கண்டுபிடிப்பதோடு, தனது ஆதாரங்கள் அனைத்தையும் காவல் துறையிடம் ஒப்படைக்கிறார். மறுபுறம் வில்லனின் ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் விற்கப்பட்ட
நிலங்களும் அங்கீகாரம் இல்லாத நிலம், என்பதால் மக்கள் அவற்றை திரும்ப கொடுத்து தங்களது பணத்தை கேட்டு போராட்டம் நடத்த, வில்லனை கைது செய்யும்படி கல்லூரி மாணவர்களைச் சேர்த்து,
நாயகன் போராட்டம் நடத்துகிறார். இதனால், வில்லனின் அனைத்து நிறுவனங்களுக்கும் சீல் வைக்கும் காவல் துறை அவரையும் கைது செய்கிறது.
ஜாமினில் வெளியாகும் வில்லன் ன், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய நாயகனை கொலை செய்ய முயற்சிக்க அதில் இருந்து தப்பிக்கும் நாயகன் mதனது காதலியுடன் அந்தமானுக்கு செல்கிறார்.
நாயகன் நாயகியைத் தேடி அந்தமானுக்கு செல்லும் வில்லன் ன், அவர்களை என்ன செய்தார்? என்பது தான் ‘அந்தமான்’ படம்.
ரிச்சர்ட் மாணவ விஞ்ஞானியாகவும், போராளியாகும் நடித்துள்ளார் . ஆக்ஷன், நடனம் என்று அனைத்திலும் சிறப்புன். மனோ சித்ரா, காதல் காட்சிகளிலும் ஒகே
வில்லனாக அறிமுகமாகியுள்ள கண்ணதாசன், உருவத்தோடு நடிப்பிலும் கவனிக்க வைக்கிறார். அவரது அந்தமான் அடியாளாக நடித்துள்ள ,
இசையமைப்பாளர் எஸ்.பி.எல். செல்வதாசனின் நடிப்பும் கவனிக்க வைக்கிறது
எஸ்.பி.எல்.செல்வதாசன் இசையில் டி.ஆர்.ஆஸ்.ரமணி ஐயரின் வரிகளில் உருவாகியுள்ள பாடல்கள் அனைத்தும் ஒகே ராகம்
கானா பாலா பாடிய “காலை மாலை தெரியாம குடிக்கிற மனுஷா…குடும்பத்தைவிட பாழாய் போன குடிதான் பெருசா….” என்ற பாடல் அறிவுரை சொல்லும் பாடலாகவும் அமைந்துள்ளது.
அதேபோல், அம்மா செண்டிமெண்ட் பாடல் சிறப்பு
ஒளிப்பதிவாளர் செல்வா ஆர்.எஸ், அந்தமானின் அழகை நம் கண் முன் நிறுத்த, நடன இயக்குநர் கூல் ஜெயந்த், பாடல் வரிகளுக்கு ஏற்ற சிறப்பான நடனத்தை அமைத்துள்ளார்.
பாடல்கள் மட்டும் இன்றி இப்படத்தின் கதை மற்றும் வசனத்தையும் எழுதியுள்ள டி.ஆர்.எஸ்.ரமணி ஐயர், சமூகத்திற்கு தேவையான ஒரு கதையை கொடுத்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அப்பாவி மக்களை ஏமாற்றுவதை தனது கதையில் சொல்லி இருக்கிறார்
டி.ஆர்.எஸ்.ரமணி ஐயரின் கதைக்கு, கச்சிதமான திரைக்கதை அமைத்துள்ள ஆதவன், கதையாசிரியர் சொல்ல நினைத்ததை, தனது காட்சிகள் மூலம் புரிய வைக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை அடுத்த போரூரில் 11 அடுக்குமாடி கட்டிடம் விழுந்த சம்பவத்தையும், அதன் பின்னணியையும் இப்படம் தெளிவாக சொல்வதுடன்,
போலியான ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் பணத்தை இழந்து தவிக்கும் அப்பாவி மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியாகவும் அமைந்துள்ளது.
மொத்தத்தில், காதல், காமெடி, ஆக்ஷன் என்று கமர்ஷியல் படமாக இருந்தாலும், அதில் சமூக அக்கறையுடன் நல்ல விஷயங்களையும் சொல்லியிருக்கிறது இந்த ‘அந்தமான்’.