நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியபோது, “சுந்தர் சி சார் படத்தில் வேலை பார்ப்பது, நமது அப்பா அண்ணன் உடன் வேலை செய்வது மாதிரி தான். அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லி விடுவார். வேலை எப்போதும் ஜாலியாக இருக்கும். இப்படத்தில் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்.”என்றார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியபோது, “நடிக்க வந்து 10 வருடங்களுக்குப் பிறகு தான் சுந்தர் சி சார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் நமக்கு வாய்ப்பு வருமா என ஏக்கம் இருக்கும். நல்ல வேலை தெரிந்த இயக்குநர் உடன் வேலை பார்க்கும் போது நமக்குள் உற்சாகம் தானாக வரும். அவருடன் எல்லா படத்திலும் வேலை பார்க்க ஆசை. அத்தனை கச்சிதமான இயக்குநர். நடிகர்களை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வார். இந்தப் படம் கண்டிப்பாக பிரமாண்ட வெற்றி படமாக இருக்கும்.”என்றார்.
நடிகை கோவை சரளா பேசியபோது, “இந்த கம்பெனியில் நான் ஒரு கம்பெனி ஆர்டிஸ்ட். எல்லா படத்திலும், நான் இருப்பேன். இவ்வளவு பெரிய படத்தை கட்டி ஆள்வது சுந்தர் சி சாரால்தான் முடியும். சின்ன தவறு செய்தாலும் கரெக்டாகக் கண்டுபிடித்துச் சரி செய்து விடுவார். மிகத் திறமையானவர். இவரைப்போல் அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் தமிழ் சினிமாவில் இப்போது யாருமே இல்லை. படத்தில் வேலை பார்ப்பது போன்றே இருக்காது. இப்படம் மற்ற அரண்மனை படங்கள் போல் இருக்காது. அதைவிட அட்டகாசமாக இருக்கும். தமன்னா, ராஷிகண்ணா நன்றாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.”என்றார்.
நடிகர் யோகிபாபு பேசியபோது, “இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த சுந்தர் சி சார் தயாரிப்பாளருக்கு நன்றி. கலகலப்பு படத்தில் வேலை பார்த்த போது என்னை அழைத்து நீங்க நடந்து வரும்போது உங்க தலைக்குப் பின்னாடி ஒரு சக்கரம் சுத்துது என வாழ்த்தினார். அவரது ஆசிர்வாதத்தால் இன்னும் திரையுலகில் என் வாழ்க்கை சக்கரம் சுத்த வேண்டும். அவர் நிறைய வாய்ப்பு தர வேண்டும். “என்றார்.
நடிகை ராஷி கண்ணா பேசியபோது, “எல்லா அரண்மனை படத்தை விடவும் இந்த படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக எல்லா படத்தை விடவும் பிரம்மாண்டமாக இருக்கும். சுந்தர் சி அத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளார். அவர் இந்த மாதிரி கமர்ஷியல் படங்களை எடுப்பதில் வல்லவர். இந்தப் படம் வேலை பார்த்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. நடிகை தமன்னாவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளேன். இப்போது தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் அட்டகாசமாக வந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி சூப்பர் பாடல்கள் தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் “என்றார் நடிகை தமன்னா பேசியபோது, “சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம்தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும்படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச் சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார் வாழ்த்துக்கள். கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். “என்றார்.
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியபோது, “அரண்மனை 4 சுந்தர் சி அண்ணாவுடன் ஆறாவது படம். என்னை இசையமைப்பாளராக, ஹீரோவாக அறிமுகப்படுத்தி என் மீது மிகப்பெரும் அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருக்கும் அண்ணாவிற்கு நன்றி. அரண்மனை 4 எல்லாப் படங்களையும் விடப் பிரம்மாண்டமான வெற்றி பெறும். தமன்னா, ராஷிகண்ணா இருவரும் மிக அழகாக இருக்கிறார்கள். படத்தில் அத்தனை அழகாக நடித்துள்ளனர். யோகிபாபு, சரளா மேடம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.”என்றார்
இயக்குநர் சுந்தர் சி பேசியபோது, “அரண்மனை முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி ஒரு சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றிதான் இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக ஒரு படத்தைச் செய்யலாம் என நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே படத்தைத் துவங்குவேன் .
தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – Avni Cinemax (P) Ltd & Benz Media PVT LTD
எழுத்து இயக்கம் – சுந்தர் சி
வசனம் – வெங்கடேஷ்
இசை : ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர்
கலை இயக்கம் – பொன்ராஜ்
சண்டைப்பயிற்சி – ராஜசேகர் K
ஸ்டில்ஸ் – V.ராஜன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)