ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாகத் தயாரிக்க,
தமிழ் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் படமும் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படமுமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றவரும்
‘ரணதந்த்ரா’ மற்றும் ‘சிலந்தி – 2’ போன்ற படங்களின் இயக்குனருமான ஆதிராஜன், அடுத்து கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் புதிய படம் ‘அருவா சண்ட’
தென் மாவட்டங்களில் நடந்து வரும் ஆணவக் கொலைகளின் பின்னணியில், ஒரு கபடி வீரனின் கரடு முரடான காதல் கதையாக உருவாகி வருவதோடு,
தமிழர்களின் தேசிய அடையாளமான கபடியின் பெருமைகளை உலகறிய உரக்கச் சொல்லவும் வருகிறது இந்த ‘அருவா சண்ட ‘
படத்தின் கதை நாயகனாக நடிக்கும் ராஜா திருநெல்வேலியைச் சேர்ந்த நிஜமான கபடி வீரர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
இவர்களோடு இதுவரை திரையில் பார்த்திராத புதுமையான அம்மாவாக சரண்யா பொன்வண்ணனும், வில்லானாக ஆடுகளம் நரேனும் நடிக்கிறார்கள்.
மற்றும் கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து, நெல்லை சிவா, பிளாக் பாண்டி, சின்ராசு, ரஞ்சன், சின்னத்திரை புகழ் சரத், அழகப்பன் ஆகியோர் கூட்டணி அமைத்து காமெடி கொடுக்க இருக்கிறார்கள்
போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம், தகராறு உட்பட பல படங்களுக்கு இசையமைத்த தரண் இசையமைக்கும் 25வது படம் இது.
அமர்க் களமான ஐந்து பாடல்களை 7 வது முறையாக தேசிய விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து எழுதுகிறார்.
கன்னடத்தில் ஸ்டைல் கிங், மிரர் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சதோஷ் பாண்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.
“ காஸ்மோரா, தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும், வல்லினம் படங்களுக்கு எடிட்டிங் செய்தவரும் தேசிய விருது பெற்றவருமான வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார்.
கலை ஏ.டி.ஜெ, ஸ்டன்ட் மிரட்டல் செல்வம், நடனம் சிவசங்கர், தீனா , தயாரிப்பு மேற்பார்வை ; சங்கர் ஜி. டிசைன்ஸ் சபீர்.
படப்பிடிப்பு வரும் ஜூன் மாத இறுதியில் தொடங்கி புதுக்கோட்டை, தஞ்சை, மற்றும் மதுரை பகுதிகளில் நடைபெற உள்ளது.
வெற்றி ஒண்ணு ; லாபம் ரெண்டு என வெல்லட்டும் ‘அருவா சண்ட’!