அழகென்ற சொல்லுக்கு அமுதா @ விமர்சனம்

amutha-1

ரால்ஃப் புரடக்ஷன்ஸ் சார்பில் ரஃபேல் சல்தன்ஹா தயாரிக்க,

ரேஜன் சுரேஷ் , ஆர்ஷிதா , பட்டிமன்றம் ராஜா ஆகியோர் நடிப்பில்

நாகராஜன் இயக்கி இருக்கும் படம் அழகென்ற சொல்லுக்கு அமுதா .

 அமுதா (?) அழகா ? பார்க்கலாம் .

ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக இருந்து கொண்டு , அம்மா , அப்பா , தங்கை மூவரிடமும் வெட்டிப் பயல் , தண்டச் சோறு என்று பெயர் வாங்கிக் கொண்டு ,

அப்படியே நடந்து கொண்டு , தன் போன்ற நண்பர்களுடன் வெட்டியாக ஊரைச் சுற்றும் ஒருவன் (ரேஜன் சுரேஷ்) ,

இளநீரை ஒழுங்காக குடிக்காமல் சட்டையில் ஊற்றிக் கொண்டு குடிக்க ,

amutha-3

அப்போது சாலையில் வரும் அமுதா என்ற பெண் (ஆஷ்ரிதா) அவன் கேவலமாக குடிப்பதாக எண்ணி சிரிக்க,

அவள் மீது அவனுக்கு காதல் வருகிறது ! 

காதல் என்ற பெயரில் அமுதாவை டார்ச்சர் செய்கிறான் அவன் . யார் சொல்லியும் கேட்கவில்லை.

இருவருக்கும்  உறவு என்று சுவரில் எல்லாம் கிறுக்கப்படுகிறது .

அவனுக்கு பயந்து அமுதா நல்ல ஒரு  மாப்பிளையை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க , அவள் பெற்றோர் வரன் பார்க்க ,

பெண் பார்க்க வரும் மாப்பிள்ளைகளிடம் எல்லாம் அமுதாவுக்கும் அவனுக்கு உறவு என்று சொல்லி விரட்டுகிறது ஒரு கும்பல்.

amutha-5

அமுதாவின் தோழி , ‘இனிமேல் நீ வேறு எந்த மாப்பிள்ளையையும் கல்யாணம் செய்து கொண்டால் அவர்கள் முதலிரவு அன்றே உன்னை பற்றி தப்பாக பேசி அடிப்பார்கள் . சிகரெட்டால் சூடு வைப்பார்கள்” என்று சொல்ல ,

தனக்கு காதல் டார்ச்சர் கொடுத்தவன் மீது காதல் வந்து,  அவனையே திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள் அமுதா  . ‘ஆசைப்பட்ட பொண்ண உஷார் பண்ணிட்டான்யா’ என்று பெருசுகள் அவனை வாழ்த்த படம் முடிகிறது .

இதுதான் அழகென்ற சொல்லுக்கு அமுதா.

எவ்வளவு கேவலமான — பிற்போக்குத்தனமான — பெண்களை கேவலப் படுத்துகிற கதை என்று படித்த உடன் கோபம் வருகிறது அல்லவா? தப்பே இல்ல

ஆனால் இதை காமெடி தூவி சொல்கிறார்கள் .

amutha-2

ரஜினி ரசிகர்களை — ரஜினி படம் வசனங்களை படம் முழுக்க நாற அடிக்கிறார்கள் . ஒரு காட்சியில் விஜயகாந்தை கிழித்துத் தொங்க விடுகிறார்கள் .

ஜே கே கல்யாண் ராமின் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது .

பாடல்களிலும் பின்னணி இசையிலும் அசத்தி இருக்கிறார் ராஜின் மகாதேவ் . வெரைட்டியான பாடல்கள் . சபாஷ்
மூளையை கழட்டி வைத்து விட்டு ..ம்ஹும் உடம்பில் இருந்து தலையையே கழட்டி வைத்து விட்டு …

மனசாட்சியை தொலைத்து விட்டு மார்பில் கண்களை வைத்துக் கொண்டு படம் பார்த்தால் ….. சிரிக்கலாம்.

அழகென்ற சொல்லுக்கு அமுதா… ஊசிப் போன தயிர்வடையில் ஊறும் சுவையான பூந்தி.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *