எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்க, வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன், விவேக் பிரசன்னா ஆகியோர் நடிக்க, நவீன் ராஜ்குமார், கலைச்செல்வன், வினு கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து எழுதி , சவிர் சுதாகர் இயக்கத்தில் Zee5 தளத்தில் காணக் கிடைக்கும் தொடர்.
கிரிக்கெட் விளையாட்டில் அதீத ஆர்வம் கொண்டு கிராமத்தில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் சிலர் (வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், உள்ளிட்டோர்) மற்றும் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள ஓர் இளம்பெண் (லாவண்யா அன்பழகன்) ஆகியோர் பள்ளி,கல்லூரி காலம் தொட்ட நண்பர்கள்
தோனி சென்னையில் கடைசியாக ஆடும் மேட்சை சென்னை வந்து பார்க்க வேண்டும் என்று அவர்களுக்கு தீராத ஆவல்.
உள்ளூரில் அவர்கள் கிரிக்கெட் விளையாடி வென்ற பணத்தை சம்மந்தப்பட்ட சிலர் தர மறுக்க, அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு மேட்ச் பார்க்க சென்னை வந்து விடுகின்றனர்.
சென்னை அவர்களுக்கு பல அனுபவங்களை கற்றுத் தருகிறது. போலி டிக்கெட் வாங்கி ஏமாறுகிறார்கள்.கிரிக்கெட் போட்டிக்கு சமோசா அனுப்பும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள்.சிலர் இவர்களை அடிக்க வருகின்றனர் .தங்க இடம் இல்லாமல் அரசு ஹாஸ்டல் ஒன்றில் சட்ட விரோதமாக தங்குகிறார்கள் .
ஊரில் பணத்தை திருடிக் கொண்டு வந்தது பெரிய பிரச்னை ஆகிறது.
அதற்காக பணம் சம்பாதிக்க, ஒரு விதமான கிரிக்கெட் சூதாட்டத்தில் (போட்டியை டி வி யில் பார்த்துக் கொண்டே அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகித்து ஐடியா கொடுப்பதன் மூலம் சூதாட்டம் நடக்க துணை போவது) ஈடுபடுகிறார்கள்.அதில் சில பிரச்னைகள்.
கடைசியில் என்ன ஆனது? தோனி ஆடும் ஆட்டத்தை பார்த்தார்களா? ஆபத்து இல்லாமல் தப்பினார்களா? ஊரில் நடந்தது என்று சொல்லும் ஆறு எபிசோட் தொடர்.
கிராமம், நண்பர்கள் , கிராமத்து பாணியிலான போட்டிகள், நீண்ட நெடிய வர்ணனைகள் என்று… முதல் இரண்டு எபிசோட் சாதாரணமாகவே போகிறது. ஆனால் சென்னை வந்த பிறகு கொஞ்சம் சூடு பிடிக்கிறது . கிரிக்கெட் மேட்ச்களை ஒட்டி சென்னையில் நடக்கும் மோசடிகளையும் சொல்கிறார்கள்.
வேற்று அணி ஆதரவாளர்களோடு சண்டை , நட்பு எல்லாம் வருகிறது.
சூத்தாட்ட விஷயத்தில் சில சிறப்பான கற்பனைகளை சேர்த்து இறுதி எபிசோடுகளில் சுவாரசியம் சேர்க்கிறார்கள்.
இறுதியில் முடித்த விதமும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது
வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜஹபர் சாதிக், விவேக் பிரசன்னா ஆகியவர்களின் நடிப்பு இயல்பு மற்றும் எளிமை.
இயக்கம் , இசை , ஒளிப்பதிவு , படத் தொகுப்பு எல்லாம் ஓகே ரகம்.
கிரிக்கெட் விரும்பிகளின் சாய்ஸ்.மற்றவர்களும் பார்க்கலாம்