‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ பத்திரிக்கையாளர் சந்திப்பு

கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்கத் தொழில் முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார்.

மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றோருக்கு உதவுவதற்காகவும் லைஃபை என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்.

2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக போர்ட்லேண்ட் வணிக இதழால் அங்கீகரிக்கப்பட்டார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பியதால் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ் திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.  இத் திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்த்ராஜ், இளவரசு, ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,சுனில் ரெட்டி, லிவிங்ஸ்டன், பிபின், மறைந்த ஷிஹான் ஹுசைனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ‘டிமான்ட்டி காலனி-II’ கடந்த 15-8-2024 அன்று வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்தது.

இந்த சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் வரும் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதனையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு  நடைபெற்றது. 

நிகழ்ச்சியின் முதலாவதாக படத்தின் கதாநாயகன்  வைபவ் பேசும்பொழுது,” இது  ஒரு கலகலப்பான திரைப்படம். இயக்குனர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் ஆகிய இருவரும் இத்திரைப்படத்தை சிறப்பாக கொடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அமெரிக்காவில் மிக முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர். அவரது தொண்டு நிறுவனம் சார்பில் பல நல்ல விஷயங்களை செய்கிறார். வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களுக்கு  நன்றி. இத்திரைப்படம்  நகைச்சுவை விருந்தாக இருக்கும். ஜூன் 20-ஆம் தேதி படம் வெளியாகிறது. ஊடக நண்பர்களும் ரசிகர்களும் தங்களது ஆதரவை தருமாறு கேட்டு கொள்கிறேன்” என்றார்.

அதுல்யா பேசும்பொழுது, ” சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் படப்பிடிப்பு நடக்கும்போதே கலகலப்பாக உருவானது.  படம் முழுவதும் நகைச்சுவையாக இருக்கும். படம் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகிறது. அனைவரும் திரையரங்கில் கண்டுகளித்து ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.”என்றார்.

நடிகர் மணிகண்டா ராஜேஷ் பேசும் பொழுது,”எனக்கு இத்திரைப்படம் மூலம் நல்ல கதாபாத்திரம் கிடைத்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். ஜாலியான திரில்லர் மற்றும் ஜாலியான சண்டைக் காட்சிகளுடன் வைபவ் மற்றும் மூத்த கலைஞர்களுடன் நடித்ததை ஒரு பாக்கியமாக கருதுகிறேன். எனக்கு வாய்ப்பளித்த மனோஜ் பெனோ மற்றும் தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் அவர்களுக்கும், அதிக ஒத்துழைப்பு அளித்த இயக்குனர்களுக்கும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

சாம்ஸ் பேசும் பொழுது,” நல்ல தரமான படைப்புகளை தமிழ்த் திரையுலகுக்கு அளிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படத்தயாரிப்பில் பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் கண்டிப்பாக மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். அந்நிறுவனத்தின உரிமையாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ ஆகிய இருவருக்கும் மிக்க நன்றி. இரட்டை இயக்குனர்கள் இருவரும் முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை கட்டுக்கோப்பாக கையாண்டு சிறப்பாக பணியாற்றி ஜாலியான ஒரு திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் தமிழ்த்திரையுலகில் நல்ல எதிர்காலம் உள்ளது. என்னுடன் பணியாற்றிய சக கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”, என்றார்.

நடிகர் ஜான் விஜய் பேசும்பொழுது,” நடிகர் மற்றும் வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனியின் மாணவன் நான். அவரின் கடைசிப் படத்தில் அவருடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவம். இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரம் அளித்துள்ளார். வைபவ், அதுல்யா, மணிகண்டா ராஜேஷ் ஆகியோர் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். என்னுடன் நடித்த சக கலைஞர்களுடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகை சூர்யா கணபதி பேசும்பொழுது,” சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் எனக்கு முக்கியமான கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சிறிய கதாபாத்திரம் என்றாலும் கண்டிப்பாக பேசப்படும்படி இருக்கும். இந்த வாய்ப்பளித்த விக்ரம் ராஜேஷ்வருக்கு நன்றி. வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ அவர்களை நீண்ட நாட்களாக தெரியும். அவருக்கும் படப்பிடிப்பில் நான் மகிழ்ச்சியாக உணர வைத்த சக நடிகர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

அடுத்ததாக சண்டை பயிற்சியாளர் ‘DON’ அசோக் பேசியதாவது,” . வைபவ் அவர்களுடன் நீண்ட நாட்களாக திரைத்துறையில் பயணித்துள்ளேன். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் படத்தை திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவளியுங்கள்”, என முடித்தார்.

இயக்குனர் விக்ரம் ராஜேஷ்வர் பேசும்பொழுது,”எட்டு வருடங்களுக்கு முன் இப்படத்தின் கதையை மனோஜ் பெனோ அவர்களிடம் கூறினேன்; எட்டு வருடங்களுக்குப் பிறகும் கூட என்மீது நம்பிக்கை வைத்து பாபி பாலச்சந்திரனின் பிடிஜி யுனிவர்சல் சார்பில் இப்படத்தை தயாரித்தது எனக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. படத்தின் கதை எழுதும்போதே வைபவ் தான் கதாநாயகன் என்று முடிவெடுத்து விட்டேன்;

அதேபோல தமிழ் தெரிந்த கதாநாயகி வேண்டும் என்பதால் அதுல்யாவை தேர்ந்தெடுத்தோம். அதே போல இசையமைப்பாளர் இமானும் நானும் பள்ளிக்காலத் தோழர்கள், அவர் இந்த படத்தில் பணியாற்றியது கனவு பலித்தது போன்று இருந்தது. மேலும் மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது 5 படங்களில் பணியாற்றியது போல இருந்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தனர். படத்தயாரிப்புக் குழுவுக்கும் உதவி இயக்குனர்களுக்கும் மிக்க நன்றி” என்றார்.

 மனோஜ் பெனோ பேசும்பொழுது,” பல்துறை வித்தகராக விளங்கும் பாபி பாலச்சந்திரன் அடுத்ததாக திரைப்படத் தயாரிப்பிலும் கால் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதே பிடிஜி யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட். ஏற்கனவே உள்ள துறைகளில் வெற்றி கண்டதைப் போலவே இந்த துறையிலும் சாதிக்க வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அதற்கு அவர் அமைத்த குழுவே எங்களுடைய பிடிஜி படத் தயாரிப்புக் குழு. அவரைப் போன்ற பெருமைக்குரிய நபருக்கு மென்மேலும் பெருமை சேர்ப்பதே எங்களுடைய கடமை மற்றும் பொறுப்பு. மேலும் அவருக்கு சினிமா துறையில் அதீத ஈடுபாடு உண்டு. 

நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்பதில் எங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளது. திறமையான நடிப்பை வெளிப்படுத்திய வைபவ் மற்றும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு சிறப்பான பங்களிப்பை அளித்த அதுல்யா மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் ‘எக்ஸ்டெர்ரோ’ குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என நிறைவு செய்தார்.

இத்திரைப்படம் வரும் ஜூன் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *