இசையமைப்பாளர், பாடகர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் படைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர்.
பென் கிங்க்ஸ்லீ நடித்த ‘A Common Man’ என்ற ஹாலிவுட் படத்திற்கு இசை அமைத்தவர். ,
இந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் இசை வடிவங்களை உருவாக்கியவர்.
பக்தி பாடல்கள் முதல் fusion வரை பல இசைப் படைப்புகளை உருவாக்கிய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்.
ராமானுஜன்’ திரைப்படத்திற்கு அவர் அமைத்த இசையை, பெருமை மிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீடான The Cambridge Companion to Film Music, விவாதித்திருக்கிறது
இப்படி பல சிறப்புகள் கொண்ட ரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகள் மற்றும் இசைக்கு இவ்வருடசங்கீத கலாநிதி திருமதி அருணா சாய்ராம், திருமதி நித்யஸ்ரீ மகாதேவன்,
திரு.சிக்கில் குருசரண், திரு. அபிஷேக் ரகுராம், திரு. உன்னி கிருஷ்ணன், செல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருமதி காயத்ரி வெங்கட்ராகவன், திருமதி அனுராதா ஸ்ரீராம்,
திரு ஸ்ரீராம் பரசுராம் மற்றும் திருச்சூர் சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் கர்நாடக இசை நிகழ்ச்சி ஒன்று,
CLASS OF CLASS என்ற பெயரில் 28 ஜூலை 2018. அன்று சென்னை சேத்துப்பட்டு சர் முக்தா வெங்கடசுப்பா ராவ் ஹாலில் நடைபெற உள்ளது .
இது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரமேஷ் விநாயகம் , “பாரம்பரிய இசை மெட்டுக்கள் மூலம் கதை சொல்லும் பாணியை இந்திய திரையுலகம் மட்டுமே முதலில் கையாள ஆரம்பித்தது.
ரமேஷ் விநாயகம்
காலப்போக்கில், கதை சொல்லும் யுக்திகள் பல வளர்ந்தாலும், பாடல்கள் என்பது இயக்குனர்களுக்கு எப்போதுமே முக்கிய கருவியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.
எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி முதல் பாம்பே ஜெயஸ்ரீ வரை, ஜி.என்.பாலசுப்ரமணியன் முதல் உன்னி கிருஷ்ணன் வரை,
என்றும் தனக்கு இணையில்லாத பாபனாசம் சிவன் என எண்ணற்றோர் திரையுலகில் முத்திரை பதித்திருக்கின்றனர்.
மேலும், ஜி.ராமனாதன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்,
கர்நாடக இசையின் ராகங்களில் அமைந்த இசையில் பாடல்களை உருவாக்கி திரைப்படங்களை அழகுபடுத்தியிருக்கின்றனர்.
(கர்நாடக இசையே ஒரு காலத்தில் தமிழ் இசையாக உருவாக்கி பின்னர் சம்ஸ்கிருத தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,
திரிக்கப்பட்டது என்பது வேறு விஷயம் . அது ரமேஷ் விநாயகத்தின் சப்ஜெக்டில் இல்லை )
இப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த சினிமாவிற்கும், பாரம்பரிய இசைக்குமான உறவினை,
கொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறோம்
ஒரு பாரம்பரிய இசைக்கச்சேரி முழுவதும், முப்பது பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து,
ஒரு திரை இசையமைப்பாளரின் கீர்த்தனைகளை இசைக்கப் போகிறார்கள் என்பது இதுவே முதல் முறை.
இது வரை யாரும் கண்டிராத இசை நிகழ்ச்சி இது என்று தாராளாக கூறலாம் . எனது கீர்த்தனைகளை இந்த மாபெரும் கலைஞர்கள் பாடுவது மட்டுமின்றி பாரம்பரிய இசைக் கருவிகள் ஒலிக்கும் இசை நிகழ்ச்சியாகவும் அது இருக்கும் ” என்றார் .
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி அருணா சாய்ராம் ,
” கர்நாடக இசைக்கு இப்படி நொட்டேஷன் வர வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை .
ஏனென்றால் இந்துஸ்தானி இசைக்கு அது நெடுங்காலமாகவே உண்டு . கர்நாடக இசைக்கும் அப்படி வர வேண்டும் என்ற,
என் கனவை நிஜமாகிய இசை மேதை ரமேஷ் விநாயக் . அதனால்தான் நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்” என்றார்.
நித்ய ஸ்ரீ மகாதேவன் பேசும்போது, ” ரமேஷ் விநாயக் மிகச் சிறந்த இசை மேதை மட்டுமின்றி நல்ல மனிதாபிமானியும் கூட. நானும் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறேன் என்றாலும் கூட , இப்படி எல்லோரும் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியை பார்ப்பதே ஒரு சிறந்த அனுபவம்.
அதற்காகவும் நான் காத்திருக்கிறேன். இது மாதிரி ஒரு நிகழ்வை ரமேஷ் வினாயகம் அன்றி வேறு யாரால் உருவாக்க முடியும்? ” என்றார் .
அனுராதா ஸ்ரீராம், ” இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வது மகிழ்ச்சி . எல்லா பாணி எல்லா மரபு இசையும் சிறந்தவையே . இது உசத்தி அது மட்டம் என்று எதுவும் இல்லை .
எல்லா வித எல்லா மரபு எல்லா பாணி இசைக்கும் .அது அதற்கு உரிய இடம் உண்டு . எல்லா இசையும் வளரும் எல்லாம் இறைவன் தந்த இசையே .
அவை எல்லாவற்றையும் எப்படி காக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் ” என்றார்
இதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி !
ரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளை 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS!
இடம்:சர் முக்தா வெங்கடசுப்பா ராவ் ஹால்!
நாள்: 28 ஜூலை 2018!
டிக்கட்களை www.bookmyshow.com இல் முன்பதிவில் பெறலாம் .
பெயர் : சு.செந்தில் குமரன்
புனைப் பெயர் : ராஜ திருமகன்
கல்வித் தகுதி : B.E. Mechanical
பிரசுரமான முதல் படைப்பு : கவிதை --
பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில்
தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே
தேவை என்றாராம் ஜெயவர்த்தனே!
நல்ல வேளை.....
தமிழன் ரத்தம் கேட்கவில்லையே
(ஜூனியர் விகடன் )
பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம்
மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது
விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்)
விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு)
கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு)
சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்)
நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்)
பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்)
சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் )
தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி )
நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி )
நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது )
திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்)
நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு )
-- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக)
-- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள்
பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா),
முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் )
அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து
தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462