காலேஜ்ரோடு @ விமர்சனம்

MP எண்டர்டெயின்மெண்ட்  சார்பில் பிரவீன் மற்றும் சரத்,  ஜனா துரைராஜ் மனோகர்  தயாரிப்பில் லிங்கேஷ்,  மோனிகா, ஆனந்த் நாகு, KPY அன்சர், அக்சய் கமல், பொம்மு லக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா நடிப்பில் ஜெய் அமர் சிங் இயக்கி இருக்கும் படம் 
 
சென்னையில் மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவனாகச் சேர்கிறான் ஓர் இளைஞன்  (லிங்கேஷ்).  வங்கிக் கணக்குகளை கைப்பற்றித் திருட முயல்பவர்களின் மொத்த விவரங்களையும் கைப்பற்றித் தூக்கித் தரும்  மென்பொருள் ஒன்றைக் கண்டு பிடித்துள்ள அவன் அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கிறான். அதே சமயம் மாநகரின்  முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. ஒருபுறம் அதற்கான விசாரணைகள் நடக்கின்றன. 
 
வங்கி அதிகாரி ஒருவரின் மகள் (மோனிகா) நாயகனைக் காதலிக்க , அவன் அது லட்சியத்துக்கு தடை என்று எண்ணி விலகுகிறான். நாயகனின் இன்னொரு நண்பன் ஒரு பெண்ணை நேசிக்க, அவளோ பல முறை உடல் உறவு வரை போன பிறகும் ஒரு நிலையில் அவனைப் புறக்கணித்து அயல்நாடு போக முடிவு செய்கிறாள் . கல்விக் கடனுக்காக பல்வேறு வங்கிகளுக்கு அலைந்து தோற்ற ஒரு மாணவனுக்கு நம்பிக்கை கொடுக்கும் நாயகியின் அப்பா ஒரு நிலையில் அவனை ஏமாற்றுகிறார் . 
 
அதே நேரம்  படிக்கிற படிப்பை பாதியில் விட்டு விட்டு வெளிநாடு போக நினைக்கும் அந்த பெண்ணுக்கு  நாயகியின் சிபாரிசு அடிப்படையில்  கடன் கொடுக்கிறார் . 
 
வங்கிக் கடனுக்கு அலைந்து தோற்ற மாணவனுக்கு உதவ நினைக்கும் நாயகனுக்கும் நாயகனின் கடந்த கால வாழ்க்கைக்கும் உள்ள சம்மந்தம் என்ன என்பதையும்,  கல்வி எப்படிப்பட்டவர்களின் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும்  பேசுகிறது படம் 
 
முதன்மை நாயகனாக லிங்கேஷ்  இந்தப் படத்தில் நல்ல  நடிப்பை கொடுத்துள்ளார். கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார் மோனிகா. .  முன்பாதியில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியம்.வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். ஆப்ரோவின் இசை ஒகே ராகம். 
 
எளியவர்களுக்கு வறுமை  காரணத்தாலும் வங்கிகளின் வஞ்சக முகம் காரணமாகவும் கல்வி எட்டாக்கனி ஆகக் கூடாது என்பது படத்தின் கதை . ஆனால் அதற்கு தேவையே  இல்லாத காதல் கதைப் போக்குகளால் முதல் பாதியை மூடி விட்டு இரண்டாம் பாதியில் அவசர கோலத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களோடு பயணிக்கிறது திரைக்கதை 
 
கல்வி என்பது நம் தேவை மட்டுமல்ல..அது நம் உரிமை என்பதை  பேசியிருக்கிறது காலேஜ் ரோடு

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *