இயல்புக்கும் மீறிய வயது வித்தியாசத்தில் வரும் காதல்கள் சினிமாவில் மட்டுமல்ல .. வாழ்விலும் சுவாரஸ்யம்தான். நவரத்தினம், விடுகதை என்று மிகவும் குறைவாகவே எடுத்தாளப்பட்ட அப்படி ஒரு கதைதான் விசுவநாதன் அண்ட் சன்ஸ்.
பக்குவம் நிறைந்த நடுத்தர வயது நபராக சூர்யா, காதலிக்கும் இளம்பெண்ணாக மமிதா பைஜூ இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் ராதிகா நடிக்கும் இந்தப் படத்தின் டிரைலரே பரபரப்பை ஏற்படுத்தியது.
இளமை, உற்சாகம், செண்டிமெண்ட் நிறைந்த அந்த டிரைலர் கொடுத்த பரபரப்பில் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வாத்தி, லக்கி பாஸ்கர் படங்கள் மூலம் தனக்கென ஒரு தனித்துவ கதை சொல்லல் கொண்ட வெங்கி அட்லூரியின் இயக்கம் என்பது படத்துக்கு இன்னும் ஒரு பலமான இமேஜை கட்டமைக்கிறது.
இந்த வாரம் திரைக்கு வரும் படங்களில் முதன்மை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது விஸ்வநாதன் அன்ட் சன்ஸ்.