கப்புள் ஃ பிரண்ட்லி (COUPLE FREINDLY ) @ விமர்சனம்

யூவி கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் குமார் ராஜு தயாரிக்க, சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி நடிப்பில் அஸ்வின் சந்திரசேகர் எழுதி இயக்கி தெலுங்கிலும் தமிழிலும் இருக்கும் படம்.

இன்னும் சரியாகச்  சொன்னால் சென்னையில் கதை நிகழும்  தெலுங்குப் படம் 

பண விஷயத்தால் காதலி  விட்டு விட்டுப் போய்விட , ரொம்பவும் மனம் இறுகிப் போன நிலையில்,  பைக் புல்லிங் செய்து பணம் ஈட்டும் ஓர் இளைஞனும் (சந்தோஷ் சோபன்) ,கிராமத்தில் பிறந்து வளைந்து வேலை தேடி சென்னைக்கு வரும் பெண்ணும் (மானசா வாரணாசி) சந்திக்கிறார்கள்  (BIKE  PULLING என்றால் தான் பயணிக்கும் வழியில் பயணம் செய்பவர்களை உடன் அழைத்துச் சென்று அதற்காக பணம் பெறுவது)

சாதாரண சந்திப்பு நட்பாகிறது . ஒரு நிலையில் இருவரும்  ஒரே சிறு வீட்டில் தங்குகிறார்கள். இன்டீரியர்  டெக்கரேஷன்  கம்பெனி ஆரம்பித்து முன்னேறுவது அவனது கனவாகிறது . அவளுக்கு ஐ டி வேலை கனவு

அவனது முயற்சிகள் தொடர்ந்து தோல்வியைத் தழுவ,  இவளது பேச்சு வன்மை மொழி ஆளுமை அவனுக்கு பலமாக இருக்கிறது . இவளது ஒத்துழைப்பால் அவனுக்கு  ஆர்டர்கள் கிடைக்க ஆரம்பித்து,  அவன் இன்டீரியர் டெக்கரேட்டராக பிசி ஆகிறான் . நிறைய சம்பாதிக்கிறான். அவளுக்கு ஐ டி வேலை கிடைக்கிறது. 

அதற்குள் அவர்களுக்குள் காதலும் திருமணம் கடந்த உறவும் ஏற்படுகிறது.

அந்த உரிமையில் ”’நீ ஐ டி வேலையை விட்டு என்னோடு எப்போதும் பனி புரிய வசதியாக இன்டீரியர் வேலைக்கு வந்து விடு என்கிறான்.

ஆனால் அவள், “இப்போது நீ தனியாக  சிறப்பாக இயங்க ஆரம்பித்து விட்டாய். 
லைஃப் வேறு;  தொழில் வேறு உனக்கு பிடித்தது இன்டீரியர் எனக்குப் பிடித்தது ஐ டி . என்கிறாள் அவள்.

கோபம்.

சண்டை .

பிரிகிறார்கள்.  எனினும் சுமையாக இருக்கிறது. அவளுக்கு அவள் வீட்டிலும்  அவனுக்கு அவன் வீட்டிலும் திருமணத்துக்கு வரன் பார்க்க, நிலைமை உணர்ந்து இருவரும் ஒன்று சேர முடிவு செய்கிறார்கள் . 

காதல் விஷயம்  இருவர் வீட்டுக்கும் தெரிய, பெண்ணின்  அப்பா சாதி பார்த்து மறுக்கிறார். 
அப்போது  தெரிய வரும் ஓர் உண்மை எல்லோரையும் அதிர வைக்கிறது. 

அவள் மீது உண்மையில் அன்பு காட்டுவது பெற்றோரா அல்லது காதலனா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்  இரு தரப்புக்கும் ஏற்படுகிறது . 

ஜெயித்தது யார்? காதலனா?  பெற்றோரா? ஜெயிப்பவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? அவளுக்கு அதிகம் தேவைப்பட்டது பெற்றோரா காதலனா என்பதே  இந்தப் படம். 
மிக இயல்பாக நிதானமாக ஆரம்பிக்கிறது படம். 

காதல் தோல்வியால் மனம் கெட்டித்துப் போய் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளான எளிய இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் சந்தோஷ் சோபன். 

நிதானமாக வரிகள் விழும் கவிதை போல இருக்கிறது நாயகியின் கேரக்டர் . அதில் அற்புதமாகப் பொருந்துகிறார் மானசா வாரணாசி. நன்றாக நடிக்கிறார். நகரத்துக்குள் பொருத்திக் கொள்ளும் அழகு கொண்ட கிராமத்துப் பெண்ணாக அசத்துகிறார். 

ஆங்காங்கே அட்சர சுத்தமான லிப் கிஸ்கள் தூள் பறக்கின்றன. 

இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்ய ஆசைப்படுவோருக்கு நிஜமாக பயன்படும் அளவுக்கு அது சம்மந்தப்பட்ட காட்சிகள் படிப்பினையாகவும் சபாஷ் சொல்லி ரசிக்கும் அளவுக்கும் இருக்கின்றன. 

இன்டீரியர் டெக்கரேஷனில்  நாயகனுக்கு துணையாக வரும் யோகிபாபுவின் காமெடி காட்சிகள் குறைவு என்றாலும் சிரிக்கும்படி செய்துள்ளார் யோகிபாபு. 

நாயகியின் தோழிக்கும் அவளை விட இரண்டு மடங்கு வயது கொண்ட  நபருக்கும் இருக்கும் நெருக்கத்தை   அந்தப் பெண்ணும்  சந்தோஷமாக இருப்பது போல கேஷுவலாகக் காட்டி இருக்கிறார்கள். 

சாதி காட்டி அப்பா மறுக்கும்போது வரும் அந்த   பிரச்னையும்,  அது தொடர்பான காட்சிகளும் காதலின் வலிமையை சொல்லும் கனமான காட்சிகள்.

படமாக்கலில் அசத்தி இருக்கிறார் இயக்குனர்  அஸ்வின் சந்திரசேகர். 

இதயத்தை திருடாதே படம் வந்து விடக் கூடாது என்று கவனமாக வண்டியை திருப்பி , நினைவே ஒரு சங்கீதம் என்ற எண்பதுகளின் தமிழ் திரைப்படத்தை ஒட்டி படத்தை கொண்டு போய் நிறுத்துகிறார்கள்.

படம் மனதுக்குள் நுழைய . முக்கியக் காரணம் கதாநாயகி மானசா வாரணாசியின் நடிப்பும் தோற்றமும் .. 

COUPLE  FREINDLY ….. நெகிழ்ச்சி 

About Su Senthilkumaran

பெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே! நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462

View all posts by Su Senthilkumaran →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *